காளிமுத்து கேட்கலாமென நினைத்த தொகைக்கும், எவ்வளவு எனக் கேட்காமல் வைத்திலிங்கம் தன் சட்டையிலிருந்து எடுத்த தொகைக்கும் பத்து மடங்கு வித்தியாசமிருந்தது. எண்ணில், மடங்கு வித்தியாசம் அவ்வளவு பெரிதில்லை. ஆனால் பணத்தில், கட்டணத்தில், கூலியில்? பெரிய்..ய தொகைதான்!
பெட்ரோல் விலை மேற்கூரையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், வசூலித்தாக வேண்டிய கட்டணத்தை, பாவமென்றோ தருமமென்றோ கேட்டுப் பெறாது, கையில் சுட்டுக்கொள்ள முடியுமா? கட்டணம் என்ன வெறும் பணமா? அதற்குள் தனது கூலியும், எரிபொருளும், ஆட்டோவின் தேய்மானமும் அடங்கியிருக்கிறது, என்பதைக் காளிமுத்து ஒரு கணம் நினைத்துப் பார்த்துக்கொண்டார்.
இந்தச் சவாரிக்கான பணத்தை வம்படியாகத்தான் கறக்க முடியும் போலும்! சவாரி செய்கிறவர் படித்தவராக, எதோ ஓர் அலுவலகத்தில் ஊழியம் செய்பவராகவோ அல்லது ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவராகவோ இருக்கிறார் என்பதை நினைக்கையில் காளிமுத்துவின் தலை ஒரு கணம் சுற்றவே செய்தது. ஓட்டிக்கொண்டிருந்த ஆட்டோவின் வேகத்தைக் குறைத்து, அவருக்கு அவரே தன்னம்பிக்கை மூட்டிக்கொள்ளும்படியாக, ஒலியெழுப்பிக்கொண்டார்.“ரோட்டுல ஆளே இல்ல. என்னதுக்கு இப்ப ஹாரன் கொடுத்தாரு?” எனப் பின்னால் உட்கார்ந்திருந்தவர்கள் பேசிக்கொண்டது, அவருக்குக் கேட்கவே செய்தது. ஆட்டோ, கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் வந்து நின்றது. சாலையோரக் கடைகளையொட்டி அவர் ஆட்டோவை நிறுத்தினார். ஆட்டோவிலிருந்து இறங்கிய வைத்திலிங்கம், அவரது மனைவி இறங்குவதற்குள்ளாகவே பணத்தை நீட்டினார். “மதுர பஸ்ஸல தானே ஏறணும்? ” கேட்டார் காளிமுத்து. ஆம் அல்லது இல்லை, இரண்டில் ஒரு பதிலைச் சொல்லாமல்,“ஏன்?” என வினவினார் வைத்திலிங்கம். “தஞ்சாவூர்னா, எதிர்ப் பக்கம் இறக்கி விடுறே”.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then