அவ்வப்போது யாமத்தில் அப்பா குடித்துக் கிறங்கி வரும் நாட்களில் அம்மையின் முலை மேட்டிலும் பொசத்திலும் மூர்க்கமான மிருக ரேகை படர்ந்திருக்கும் யாருமறியாதவாறு அதிகாலையிலே ரேகைகளை அழிக்க முயலும் அம்மைக்கு நானும்...
இளையராஜாவிடமிருந்து ஏ.ஆர்.ரகுமானுக்கோ யுவன் சங்கர் ராஜாவுக்கோ நான் மதம் மாறிவிட வேண்டிய நேரம் வந்துவிட்டதென்றே நினைக்கிறேன் என் காயங்களின் மேல் அவர் கண்ணீரின் உப்பைத் தடவுகிறார்...
நாம் நினைத்த இடத்திற்கெல்லாம் இளையராஜா வரமாட்டார். இளையராஜா எங்கு கூட்டிப் போகிறாரோ அங்கேதான் நாம் போகவேண்டும். அவருக்கு அப்படியென்ன செருக்கு அதனால்தான் அவரைக் குண்டுக்கட்டாகத் தூக்க...
இன்று அதிகாலையில் சுந்தரமூர்த்தியைத் திடீரென மகிழ்ச்சி பிடித்துக்கொண்டது. வீட்டிலிருந்து பணிமனைக்கு காற்றுவெளியினில் பயணம் போகிறார். கீயரையும் ப்ரேக்கையும் கடவுள் கவனித்துக்கொண்டார். வானம் “மெல்ல தூறவா?” என்று...
வீடு 1 வீடென்பது, சுறாவின் வாயாக இருந்தாலன்றி, யாருமே வீட்டைவிட்டு வெளியேற மாட்டார்கள். மொத்த நகரமும் தப்பி ஓடுவதைப் பார்த்த பிறகே, நீயும் எல்லையை நோக்கி ஓடினாய்....







