ஊருக்குள் அடங்காமல் சற்றே தூரத்தில் எமது சஞ்சரித்தல் மூர்க்கமாய்ப் பேரன்பைப் பிரசவிக்கும் அவ்வாதி பெரும்புலத்தில் அடர்வன நிழலாய்ப் படர்ந்திருக்கிறேன் எங்கள் மூதாதைகள் கையளித்த கதைகளை அறச்சீற்றத்தோடு பண்ணிசைக்கிறேன்...
“கிழங்கு விளையும் ஆழம் நமக்குத் தெரியும். நமது பன்றிகள் கூட அந்த அளவே அறியும்! அதற்கும் கீழே எதுவோ உள்ளது, அதன்மேல்தான் பகைவர்க்குக் காமம்; இந்தக் கரிசல்...
நெடுவருடம் கழித்து யாரோ சாட்டிய எண்ணெய்க்காப்புக்குக் குளிர்ந்து நிற்கையில் சொறிந்துகொண்டு போகும் பயணச் செம்மறிகளின் வெண்மயிர்களை அப்பிக்கொண்டு மேலும் மூப்பாகிறது சிதிலக் கழுமரம். செவிகளை விறைக்கிறேன். கழுமரத்தினுள்...