“எழுதுவதால் மட்டுமே உயிர் வாழ்கிறேன்!” – கூகி வா தியாங்கோ

தமிழில்: ராம் முரளி, பச்சோந்தி

இந்தச் சமவெளியில் நான் ஆடுவேன்
இந்தச் சமவெளியில் நான் ஆடுவேன்
ஓ வரீய்ங்கா அதற்குக் கீழே உள்ள பள்ளத்தாக்கு
அதன் சொந்தக்காரருக்கே உரிமையாகும்…

கிழக்கு ஆப்பிரிக்கத் தேசமான கென்யாவின் கனலும் அகக்குரல், உலக முகம் கூகிவா தியாங்கோ. அவரது ‘சிலுவையில் தொங்கும் சாத்தானில்’ இடம்பெற்ற சொற்கள் இவை. ஒருவருடக் காலம் காமித்திச் சிறையில் தடுப்புக் காவலில் இருந்த கூகி மலம் துடைக்கும் தாளில் எழுதியது ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’. அரச ஒடுக்குமுறைகளுக்கும் அதிகாரத்துவத்துக்கும் எதிரான வலிய ஆயுதமாகத் தன் எழுத்தை நிறுத்தியவர். எரியும் யதார்த்தத்துக்கும் நினைவுகள் அடரும் கனவுவெளிக்கும் இடையே, நிதர்சனத்துக்கும் தொன்மமான மாயமொழிபுகளுக்கும் இடையே ஊடாடும் ஆழ்ந்த பண்பாட்டுக் குரலை அவரது எழுத்தில் உணரலாம். கென்ய தேசத்தின் அரசியல் பொருளியல் கலாச்சாரத் தத்தளிப்புகளினூடே மனித விடுதலையை உலகத்தன்மையில் எழுப்புபவை அவரது எழுத்துகள். சுய மரபின் மண்ணின் செறிந்த புனைவு மரபோடு பிரெக்ட், புன்யான், ஸ்விப்ட், பெக்கெட் போன்றோரின் நவீன நிறங்களோடும் இழைவுகொள்பவை. கூகியின் எழுத்துகள் பொருளியல் மைய விடுதலை என்பதோடல்லாமல் ஆழ்ந்த பண்பாட்டுக் கேள்விகளைப் பண்பாட்டு விடுதலையை முன்னிறுத்தும் விஸ்தாரமான மானுடப் பரிமாணங்கள் கொண்டவை. வட அமெரிக்க இலக்கியக் கழகத்தின் கௌரவ உறுப்பினரான கூகி வா தியாங்கோ சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் எனக் கலை இலக்கியவாதியாக மட்டுமன்றி ஊடகவியலாளராகவும் சமூகப் போராளியாகவும் திகழ்பவர். கிட்டத்தட்ட இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய கூகியின் குடும்பம் கூலிப்படையினரால் தாக்குதலுக்குள்ளானது. இதன்பின் மீண்டும் வட அமெரிக்கா சென்று தீவிரமாக எழுதத் தொடங்கினார். இவர் எழுதிய சிலுவையில் தொங்கும் சாத்தான்’, ‘தேம்பி அழாதே பாப்பா’, ‘இரத்தப்பூ இதழ்கள்’, ‘கறுப்பின மந்திரவாதி’, இடையில் ஓடும் நதி ஆகிய நாவல்களும் சில சிறுகதைகளும் தமிழிலும், ‘ட்ரீம்ஸ் இன் எ டைம் ஆஃப் வார்’ எனும் புத்தகம் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எண்பதுகளில் ஆங்கிலத்தில் வெளியான Decolonising the Mind – The Politics of Language in African Literature என்கிற நூல், இருபதாண்டுகளுக்குப் பிறகு எதிர் வெளியீடாக `அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல் ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்’ என்னும் தலைப்பில் அ.மங்கை மொழியாக்கம் செய்துள்ளார்.

காலனிய ஒடுக்குமுறையின் உள்ளார்ந்த பண்பாட்டு அழித்தொழிப்புகளின் வழி, தனது வரலாற்றிலிருந்தும் மண்ணிலிருந்தும் பண்பாட்டு ஓட்டங்களிலிருந்தும் துண்டிக்கப்பட்ட மக்களின் குரலை ஏந்தும்போது, தாய்மொழியின் சரித்திரத்தை, அதன் அடையாளத்தைத் தீவிரமாக வலியுறுத்தும் கூகி ஆங்கிலத்தைக் கைவிட்டுத் தன் சொந்த மொழியான கிகியூவில் படைப்புகளை உருவாக்கினார். அவை காலனிய நவீனத்துவத்தின் தட்டையான அறிதல்களுக்கு அப்பாற்பட்ட வீரியமும் ஞானமும் மொழியும் கொண்டவை. ஆப்பிரிக்க எதார்த்தத்தை ஏகாதிபத்திய மரபு, எதிர்ப்பு மரபு என இரு வேறு எதிர்நிலைப்பட்ட சக்திகளுக்கு இடையே நடக்கும் பெரும் போராட்டத்தின் தாக்கமாகப் பார்த்தவர். தன்னை மொழிப் போராளியாக முன்வைக்கும் கூகி, உலகம் முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கும் ஆதர்சமாகத் திகழ்ந்துவருகிறார். ஆங்கிலத்தில் வெளியாகியிருந்த வெவ்வேறு நேர்காணல்களிலிருந்து தெரிவு செய்தவற்றை நீலம் கறுப்பின வராலாற்று மாதச் சிறப்பிதழுக்காக மொழிபெயர்த்துள்ளோம்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!