1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், உலகப் புகழ்பெற்ற கொலம்பிய எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் டோக்கியோ நகருக்குச் சென்றிருந்தபோது, ‘Rhapsody in August’ எனும் தனது புதிய படத்தை இயக்கிக் கொண்டிருந்த அகிரா குரோசாவாவைச் சந்தித்து உரையாடினார். மார்க்கேஸ் தனது ‘One Hundred Years Of Solitude’ மற்றும் ‘Love In The Time Of Cholera’ போன்ற மகத்தான கிளாசிக்கல் நாவல்களை எழுதும் முன்பாக, சில ஆண்டுகள் Bogotaவில் திரைக்கதை ஆசிரியராகவும் திரைப்பட விமர்சகராகவும் பணி செய்துள்ளார். பல்வேறு தளங்களுக்கு விரியும் அகிரா குரோசாவா – காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் இடையிலான உரையாடலின் தமிழ் வடிவமிது.
மார்க்கேஸ்: நமது உரையாடலை, ஓர் ஊடக நேர்காணலைப் போல இறுக்கமாக நிகழ்த்த விரும்பவில்லை. மனதுக்கு நெருக்கமான நண்பரிடம் பேசுவதைப் போலப் பேசிடவே விரும்புகிறேன். மிகச் சிறந்த திரைக்கலைஞரான உங்களைப் பற்றியும் உங்களது படைப்புகளைப் பற்றியும் அறிந்து கொள்வதில் பேரார்வத்தில் இருக்கிறேன். நானும் திரைக்கதை ஆசிரியனாகப் பணி செய்துள்ளேன் என்பதாலும் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளை முதல் தரமான திரைப்படங்களாக உருவாக்கியவர் நீங்கள் என்பதாலும் உங்கள் திரைக்கதைகளை எப்படி எழுதுகிறீர்கள் என்பதையே முதலில் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
குரோசாவா: திரைக்கதையாக மாற்ற முடியுமென ஒரு கருவின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உருவாகும்போது, புற உலகச் செயல்பாடுகளிலிருந்து என்னை முற்றாகத் துண்டித்துக்கொண்டு காகிதம் மற்றும் பென்சிலோடு அறையொன்றில் தனியே என்னைப் பூட்டிக்கொள்வேன். சரியாக, அத்தருணத்தில் நான் தேர்வு செய்துள்ள கரு குறித்த சிறுசிறு எண்ணங்கள் மட்டுமே என்னிடம் இருக்கும். அவை அப்போது முழுமை பெற்றிருக்காது. அதன் முடிவு, முடிவின்மை குறித்தும்கூட நான் அதிகம் கவலைப் படுவதில்லை. எந்தக் காட்சியிலிருந்து துவங்குவது என்று தெரியாதபோது, என் மனதில் இயல்பாகத் திரள்கின்ற எண்ணங்களைப் பின்தொடர்ந்து திரைக்கதையாக்கப் பணியை ஆரம்பிப்பேன்.
மார்க்கேஸ்: திரைப்படம் சார்ந்து உங்கள் மனதில் முதலில் உதிப்பது ஏதேனும் காட்சிப் பிம்பமா அல்லது ஏதேனுமொரு ஐடியாவா? குரோசாவா: என்னால் இக்கேள்விக்குத் தெளிவாகப் பதிலளிக்க முடியாது. எனினும், தெளிவற்ற சிறுசிறு காட்சித் துணுக்குகளையே முதலில் உணர்கிறேன். இதற்கு முரணாக, திரைக்கதை குறித்த ஒரு மேலோட்டப் பார்வையை உருவாக்கி வைத்துக் கொண்டு, காட்சிகளால் அதை ஒழுங்குப்படுத்தி, இயந்திரத்தனமாகச் செயல்படும் சில ஜப்பானியத் திரைக்கதை ஆசிரியர்களை எனக்குத் தெரியும். ஆனால், நாம் ஒன்றும் கடவுள் இல்லை என்பதால் இதுவொரு தவறான செயல்முறை என்றே கருதுகிறேன். என்னால் அப்படி என் திரைக்கதையை முன்முடிவுகளுடன் எழுத முடியாது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then