தொடும் தூரத்தில் எதிரில் ஆள் வந்தால் முகம் தெரியும் அளவிற்கு ஆகாயத்தில் நிலா பொழிந்துகொண்டிருந்தது. கொளஞ்சியைக் கையில் பிடித்துக்கொண்டு மணக்குடி வாய்க்காலைக் கடந்து இலுப்பைத் தோப்பு வழியாக நிலா வெளிச்சத்திலேயே நடந்து ஊருக்குள் நுழைந்தாள் இந்திராணி.
“எம்மா இன்னும நம்ப அப்பா வூட்டுக்குப் போவமாட்டமா ம்மா?” இந்திராணியின் முகத்தைப் பார்த்துக் கேட்டான் கொளஞ்சி. “இதுக்கப்புறம் நம்ப மாமா ஊர்லதான் இருக்கப் போறோம்” என்று அவள் சொன்னதைக் கேட்டதும் கண்கள் மின்ன தலையை உயர்த்தி அம்மாவைப் பார்த்துக் கொண்டே உற்சாகத்துடன் நடந்தான் கொளஞ்சி. படலைத் திறந்துகொண்டு தெருவாசலை அடையும்போது வாசலில் மின்விளக்கு ஒளிர்ந்தது. கணவனிடம் சண்டை போட்டு விட்டு, பிறந்த வீட்டுக்கே குழந்தையுடன் தகவல் எதுவுமின்றித் திடீரென வந்திருப்பவள் சொல்வதையெல்லாம் கேட்டு அண்ணனும், தம்பியும் நரம்புகள் புடைக்கத் துடித்தார்கள். அவர்களது முகத்தில் உடன்பிறந்தவளுக்கான கரிசனை தெரிந்தாலும்… உள்ளூர அவள் நிரந்தரமாக இங்கேயே தங்கிவிடுவாளோ என்ற அச்சமும் இருந்தது. “ஒரு குடுத்தனக்காரி தாலிய கழட்டி, புருஷன் மூஞ்சில உட்டேறிஞ்சிட்டுப் பச்சப் புள்ளைய ராவுன்னு பாக்காம இழுத்துக்குட்டு… இப்டி மொழுக்கட்டையா வந்து நிக்கிறியேடி” என்று இந்திராணியைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டு பெரிய குரலெடுத்துக் கத்தினாள் அண்ணி. பசியால் உறங்கிப் போயிருந்த பிள்ளையைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு தூக்கம் வராமல் மோட்டுவளையை வெறித்திருந்த இந்திராணியின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்து காதுகளில் நுழைந்தது. தன் இறுதிக் காலத்தில் அப்பா தங்கியிருந்த தெருவின் கடைசியில் கிழக்குப் பக்கமிருக்கும் நாற்றாங்கால் கொட்டகையிலேயே தானும் தன் பிள்ளையும் தங்கிக்கொள்வதாக இந்திராணி அவர்களிடம் உறுதியாகச் சொன்னாள். அதைத் தவிர அவர்களிடம் பேச வேறெதுவுமே இல்லை என்பதைப் போல அமைதியாக இருந்தாள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then