கறுப்புத் திரை – ஜா.தீபா

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணம் நாஷ்வில்லி நகரத்துக்குப் பல முகங்கள் உண்டு. இன்று அங்கு உயரமான கட்டடங்கள் உள்ளன. அதிவேக வளர்ச்சிபெற்ற நகரமாகவும் இருக்கிறது. ஆனால், அறுபதுகள் வரை அங்கிருந்த நிலைமை வேறு. கறுப்பு x வெள்ளை இனப்பாகுபாடு அதிகமுள்ள பகுதியாக இருந்தது. உணவகங்களிலும் பொது இடங்களிலும் கறுப்பின மக்களுக்குத் தனி வரிசை, அலட்சியமான கவனிப்பு எனக் கடைபிடிக்கப்பட்டதில் அங்குள்ள கறுப்பின மக்கள் பொது இடங்களில் உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். இது பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியது. இதன் பின்னரே அங்கே சமூகச் சமன்பாடு மெல்லத் தொடங்கியது.

நாஷ்வில்லி பற்றிய அறிமுகத்துக்குக் காரணம் இங்கு பிறந்த கறுப்பினப் பெண் இயக்குநர் டீ ரீஸ். இவரது அப்பா காவல்துறை அதிகாரியாக இருந்தார். அம்மா ஒரு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியாகப் பணிசெய்தார். டீ ரீஸ் தனது நாற்பதாவது வயதில் ஹிலாரி ஜோர்டான் எழுதிய ‘Mudbound’ நாவலுக்குத் திரைக்கதை எழுதி அதே பெயரில் படத்தை இயக்கினார். படம் 2017ஆம் ஆண்டு வெளிவந்தது, சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இப்பிரிவில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் கறுப்பினப் பெண் ஆனார் டீ ரீஸ். அந்த வருடத்திய ஆஸ்கரைப் பெறவில்லை என்றாலும், முக்கியமான திரைப்படம் எனப் பெயர் பெற்றது. இந்த இடத்துக்கு டீ ரீஸ் சாதாரணமாக வந்துவிடவில்லை. நிறைய ஓட வேண்டியிருந்தது; கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது; தன்னையே சந்தேகப்பட வேண்டியிருந்தது. அதனால் அந்த ஓட்டத்தைப் பார்த்துவிட்டு ‘Mudbound’ பற்றிப் பேசினால் சரியாக இருக்கும்.

உள்ளாடைகள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தார் டீ ரீஸ். ஊர் ஊராகச் சுற்றுகிற வேலை, விதவிதமான மனிதர்களைச் சந்திக்க முடியும் என்பதே இந்த வேலையை டீ ரீஸ் தேர்ந்தெடுக்கக் காரணம். இந்த நிறுவனத்தில் ஒருநாள் விளம்பரப் படம் ஒன்று எடுக்கப்பட்டது. அதனை வேடிக்கை பார்க்கப் போயிருந்தார் டீ ரீஎஸ். “இதுதானே.. நான் நினைத்தது.. எனக்கு இதுதானே தேவை… இத்தனை அழகாய் கற்பனை செய்து திரையில் காட்ட முடியும் என்றால், அதை ஏன் நான் முயற்சிக்கக் கூடாது. நான் ஏன் இயக்குநராகக் கூடாது?” என்பதுதான் டீ ரீஸின் எண்ணமாக இருந்தது. அவர் இப்படி நினைத்தாராம், “நான் மீன்.. இதுவரை தண்ணீரைக் காணாத மீன்.. இதோ என்முன் தண்ணீர்.” சட்டென்று வேலையை உதறிவிட்டு மீன் தண்ணீரில் நீந்தத் தொடங்கி விட்டது. திரைப்பட இயக்கம் பற்றித் தெரிந்துகொள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டீ ரீஸ். தங்கிப் படிக்க ஒரு வீடு தேவையாக இருந்தது. நியூயார்க் நகரில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் டீ ரீஸுக்கு வீடு கிடைத்தது. அங்கு அவர் தங்கியிருக்கிறார் என்பதே ஆச்சரியமான செய்தியாக அமைந்தது. காரணம், அங்கு குடியிருந்த அனைவருமே வெள்ளை இன மக்கள். டீ ரீஸ் வீட்டினுடைய உரிமையாளர்கள் கறுப்பினத்தவர்கள், டீ ரீஸ் திரைப்படப் படிப்பில் சேரவிருக்கிறார் என்றதும், பிடித்துப் போய் வீட்டினை வாடகைக்குத் தந்திருக்கின்றனர். டீ ரீசுக்கு இது முதல் வரவேற்பாக அமைந்தது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger