அப்போது என்ன நடந்ததென்றே தெரியவில்லை. பந்தைத் துரத்திக்கொண்டு ஓடி, தடுமாறி கீழே விழுகிறேன். அதன்பிறகு எதுவும் நினைவிலில்லை. ஒரேயொரு காட்சி… நான் வலியில் துடிப்பதைப் பார்த்து அவன் பதைபதைப்புடன் கண் கலங்க நின்றது, அது மட்டும்தான் மனதிலிருக்கிறது. மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது இச்சம்பவம்தான் கண்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது மீண்டும்… வீட்டிலுள்ள எனதறையில் இருக்கிறேன். சுற்றி பொருட்களெல்லாம் சிதறிக் கிடக்கின்றன. எதையோ தேட வந்தேன், அது கடந்த காலத்தைக் கிளறிவிட்டிருக்கிறது. அடிக்கடி நடப்பதுதான். என்னதான் புதிய புதிய விஷயங்களைச் செய்தாலும் பழைய நினைவுகளை நோக்கித்தான் மனம் செல்கிறது. சுகமான நினைவுகளெல்லாம் இல்லை, இப்போதிருக்கும் அதே வலியும் போராட்டமுமான நினைவுகள்தாம். என்ன, அப்போது விளையாடிக் கொண்டிருந்தேன், இப்போது இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம். இந்திய அணிக்காக விளையாடியபோது அணிந்திருந்த தொப்பியைக் காணவில்லை. அதைத் தேடத்தான் வந்தேன். பள்ளி அளவிலான போட்டிகள் தொடங்கி, கவுன்ட்டி போட்டிகள்வரை பல அணிகள், பல தொப்பிகள். அதில் தொலைந்தது போக மிச்சமிருந்தது மும்பை அணிக்கான தொப்பியும் இந்திய அணிக்கான தொப்பியும்தாம். அதிலும் ஒன்று காணவில்லை. இப்போது என்ன செய்வது, ஆண்ட்ரியாவைத்தான் கேட்க வேண்டும்.
பேபி கொஞ்சம் இங்க வரியா?
சமையலறையில் இருந்திருப்பாள் போல, புலம்பிக் கொண்டே வருகிறாள்.
என்ன செஞ்சி வச்சிருக்க!
ஐ லாஸ்ட் மை இண்டியன் கேப்
அதெப்படிக் காணாமப் போகும். அந்தப் பெட்டிலதான இருந்தது. சரி, இப்போ அது எதுக்கு உனக்கு?
நாளை கெட் – டுகெதருக்குப் போட்டுக்கலாம்னு தோனுச்சு.
ஓ… இங்கதான் எங்கயாவது இருக்கணும். தேடிக்கலாம், இப்போ எழுந்திருங்க.
கண்கள் வழியாக என் மனநிலையை உணர்ந்திருப்பாள் போல, கடைசியாகப் பேசிய போது அவளது குரல் கனிந்திருந்தது. எனக்கும் கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. பாடிக்கொண்டே ஹாலுக்கு வந்து சோஃபாவில் அமர்ந்து கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தேன். மாலை பயிற்சி கொடுக்கச் செல்ல வேண்டும். டாக்சியில் போலாமா? நடந்து சென்றால் குறைந்தது ஒருமணி நேரம் ஆகும். டாக்சிக்குப் பணம் வேண்டும், யாரிடம் கேட்பது. சரி, இப்போதைக்கு ஒரு கேம் போடுவோம் என மீண்டும் கைப்பேசிக்குள் நுழைந்தேன். வாசலில் யாரோ அழைப்பது போல் இருந்தது. கதவு பாதி மூடியிருந்ததால் எதுவும் தெரியவில்லை. ஆட்டத்தைத் தொடர்ந்தேன். மீண்டும் யாரோ அழைக்கிறார்கள். எழுந்துபோய் பார்த்தேன். முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் நின்றருந்தான். கையை நீட்டி, ‘உங்க தொப்பி’ என்று தயங்கித் தயங்கிச் சொன்னான். என் உணர்வை எப்படி வெளிப்படுத்துவதென்று தெரியவில்லை. எனக்கே குழப்பமாகத்தான் இருந்தது. ஆச்சரியம், குதூகலம், பூரிப்பு… எல்லாம் இருந்தாலும் இப்படி நடக்குமென்று எதிர்பார்த்தது போலவும் இருந்தது. கண்கள் விரிந்து, நாக்கு குழறி, ஒருவழியாக “உள்ள வாங்க” என்றழைத்து, சோபாவில் அமர வைத்தேன். எனக்கு இருப்பு கொள்ளவில்லை, நிற்பதா அமர்வதா என்று தெரியாமல் மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு உள்ளே சென்றேன். இவள் எங்கு சென்றாளோ, சமையலறையிலும் இல்லை. குளிக்கச் சென்றிருப்பாளோ, என்ன அவசரம். மீண்டும் ஹாலுக்கே வந்தேன். கைகளைப் பிணைத்தபடி நின்றேன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then