அப்பா செத்ததிலிருந்து சிகாமணிக்கு அகரம் கசந்து போனது. அப்போதிருந்த அதே மனிதர்கள்தாம். மனதளவில் முற்றிலுமாய் மாறிப்போயிருந்ததை அவர்களின் நடவடிக்கைகளிலிருந்து கண்டு கொண்டான். அங்கு போய் வருவதும் குறைந்தது.
அப்பா இருந்த வீடு ஆளில்லாமல் போகவே, ஒத்தி ஒத்தி அத்துப்பிடித்து மரக்கன்றுகள் வைத்துத் தன் மண்ணாக்கிக்கொள்ளும் அவர்களைப் பிடிக்காமல் போனது. ஒவ்வொரு தடவையும் ஊருக்குப்போகும் போதெல்லாம் புதிய அத்து, புதிய வேலி அருவருப்பாய் இருந்தது. அவனுக்கு நேருக்கு நேராய் மூஞ்சில் அரைந்தது போல் கேட்டேவிட்டான் ஒரு தடவை. அப்போது அறுந்த பேச்சுவார்த்தைகள்தாம்.
அன்று என்னமோ அப்பாவின் ஞாபகம் அதிகம் துளைத்தெடுக்கவே வண்டியை எடுத்துக்கொண்டு அகரம் வந்து சேர்ந்தான். வீட்டையொட்டி கருக்கங்கன்றில் கட்டப்பட்ட மாடு, ஐந்தாறு குருத்தோலைகள் விட்டிருந்த தென்னங்கன்றை அடியோடு சுழட்டி மென்றுகொண்டிருந்தது.
“அய்க்… அய்க்… அய்… மாடு கட்டிக்கிற எடத்தப்பாரு. அண்ணாமலண்ணா, யார்துணா மாடு இது”
“நம்புல்து இல்ல எப்பா… அதோ அந்தப் பெருத்தனக்காரன் வூட்த்தா இருக்கும். முன்னமேரி இல்லடா தம்பி இந்த ஊரு. தோலிருக்க சொளய முழங்கவும் ஊர அடிச்சி ஒலையில போடவும் அலையறானுவோ”
மாட்டை அதட்டி ஓட்டியவன் வாசலுக்கு வந்தான். அப்பா வைத்த முருங்கை மரத்தில் கம்பளிப்பூச்சி படையாக அப்பிக்கொண்டிருக்க, அதனடியில் சாய்த்து நிறுத்திய அவரின் சைக்கிள் மட்கி உளுத்து உதிர்ந்து கொண்டிருந்தது. அதை எடுத்துச் செல்வம் கடையில் விட்டுச் சரிசெய்து ஓட்டலாம் என்று நினைத்து அப்படியே நாட்கள் கடந்து இன்று இப்படியாகிவிட்டது.
டயர்கள் காற்றிறங்கிக் கோடு விழுந்து கால்வாசி மண்ணில் புதைந்திருக்க, சீட்டின்மேல் காயப் போட்டிருந்த ஆரஞ்சு நிறக் கட்டம் போட்ட துண்டு இத்து நைந்து நூல் பிரிந்து இல்லாமலாகிக் கொண்டிருந்தது. சைக்கிளை முழுவதுமாய்க் கோவைக்கொடியும் சங்குப்பூக்கொடியும் இறுகப்பின்னி வேலியோடு வேலியாக இணைத்து இறுக்கியிருந்தது. வெளியே எடுக்க முயன்றால் ஒவ்வொன்றாய்க் கையோடு அதுவாகவே கழண்டு வந்துவிடுவோமா என்பதாக நினைத்த சிகாமணி அருகில் போய் நின்று கேரியரைத் தொட்டுத் தடவிப் பார்த்தான். பச்சைநிற உறைப்போட்ட கைப்பிடிகளை இரண்டு கைகளாலும் பிடித்துப் பார்த்தான். குத்தாங்காலிட்டு உட்கார்ந்து உடைந்து தொங்கும் பெடல் கட்டையை அசைத்து ஆசையோடு பார்த்தவனின் கண்கள் கலங்கின.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then