ஒட்டகச்சிவிங்கி எரியும் வெளிச்சத்தில்
நான் ஓர் இழுப்பறை,
பித்தின் உளிகொண்டு தன் இளநீல உலகில்
சல்வடோர் டாலி செதுக்கியதுபோல.
என்னுள் மிக ஆழமான இருளில்
இரகசியமாக விழித்திருக்கும் அந்த இழுப்பறை
யாராலும் எப்போதும் திறந்து பார்க்கப்படாதது.
ஆனாலும்,
கனவுக்கும் நனவுக்கும் இடையிலான
நுண்ணிய துளையில்
சாவியிட்டு எப்போதும் முயல்கிறார்கள்.
அப்படி ஒன்றுமில்லை அதற்குள்:
மகிழ்ச்சியான ஒரு பல், துக்கமான வாசனைத் தைலம்,
குழப்பமான காய்ந்த மலர்,
பாதி எரிந்து காயமுற்ற மெழுகுவர்த்தி,
பழவாசனையோடு ரத்தமும் தோய்ந்த கத்தி,
அன்பின் இரசமிழந்த கண்ணாடி,
காலாவதியான நற்சான்றுக் கடிதம்,
இழுப்பறையின் சிக்கலான வரைபடம் மற்றும்
அதன் சாவி,
காதலின் மங்கலான வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட
பழுப்பேறிய புகைப்படம்,
கடவுளிடமிருந்து வந்த பிரிக்கப்படாத கடிதம்,
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then