பொம்பளைக்கும் ஆம்பளைக்கும்
உடம்பெல்லாம் முளைக்கும் மசுருல
சாதி மதத்தை உசத்தியா கட்டுனான்
மீசை முறுக்கிய மசுரு மன்னன்…
சும்மா இருப்பானா வீரத் தமிழன்!
கூந்தலைப் பிரிச்சு
மசுரு நாறுதா மணக்குதான்னு விவாதிச்சான்
எல்லாமே எங்களுக்கு ரொம்பப் பெருசுன்னு
பெருமை பீத்தும் குடுமியான்
ஹிந்துவல்லாத அன்னியருக்கும் ஆரிய ஹிந்துவிற்கும்
மசுருதான் வித்தியாசம் என்றான்!
சுரேந்திரநாத் பானர்ஜீ பேசும்போது
தாடியைத் தடவி முடிக்கிற ஒவ்வொரு தடவையும்
நீள நீள வாக்கியங்கள் முடிவதாய்ச் சொல்லி
பேச்சை மசுராலேயே அளந்தான்!
சலூன் சேர்ல உக்காரவச்சு
பிளேடு கத்தியால் வெட்டிய மசுரு
உடம்பெல்லாம் அப்பியிருக்க
குளிச்சிட்டு வீட்டுக்குள்ள வரச் சொன்னான்
ஆதிதிராவிடனும் ஜாதிதிராவிடனும்!
மசுர வெட்டும் பிளேடே தீட்டுன்னு
பிளேட வீட்டுக்குள்ள வராதேன்னு சொன்னான் ஆரியன்!
எங்க சோப்பத் தடவிக் கழுவினா
மாயமாய் மறையும் சோப்பு என்றான் வியாபாரி!
மசுரைக் கழுவு மலத்தைக் கழுவுன்னு
உலகம் எப்பவும் கழுவிட்டே யிருக்கு
மீசை வச்ச ஆத்துக்காரனைப்
பிராமணாளாய் லட்சணமாய் இருக்கப் படாதோ
போயும் போயும் புத்தி இப்படியா போகணும்னு
திட்டினாள் மாமி!
பூர்வகுடிகள் மசுரை வெட்டத் தடையிட்டான்
புதர் மண்ட மசுரு வளத்த ஆண்டை!
தொற்று வரும் காலமெல்லாம்
சலூன் கடையை மூடுவான் மசுரு மன்னன்!
மசுரில்லா கொரனா வந்ததால
மாசக் கணக்குல மசுரு மழிக்காமே
முடங்கிக் கிடக்கிறான் மசுரு மன்னன்!
மக்களுக்கு
மசுரு மழிக்கவும் வழியில்ல
வயிறை நிறைக்கவும் வழியில்ல
பயிறுபோல மயிரை வளர்த்த மகளிரும்
மசுரு வியாபாரிக்காகக் காத்திருக்க…
உலகமெல்லாம் மசுரு மண்ட
பேனும் ஈரும் புழுத்து நாறுது!
மசுருக்குச் சாதியுமில்ல மதமுமில்ல
மசுரு மசுருதான்! மசுரு மசுருதான்!
m
ஓ தீண்டத்தக்கவனே…
உன் னுட லெங்கும்
நாத்தம்… முடைநாத்தம்…
குடலைப் புரட்டும் நாத்தம்…
அப்பாவிகளை வெட்டிக்கொல்லும்
உன் னுட லெங்கும்…
இரத்த நாத்தம்… பிண நாத்தம்…
குடலைப் புரட்டும் நாத்தம்…
அப்பாவிகளின் வாயில்
பீ திணிக்கும்
உன் னுட லெங்கும் நாத்தம்
குடலைப் புரட்டும் நாத்தம்…
அப்பாவிகளின் வாயில் மூத்திரம் பெய்யும்
உன் னுட லெங்கும் மூத்திர நாத்தம்…
குடலைப் புரட்டும் நாத்தம்…
உங்கப்பனுக்கு அப்பன் உடலில் வீசிய
அந்த நாத்தம்
உங்கப்ப னுடலில் வீசிய அதே நாத்தம்
குடலைப் புரட்டும் முடை நாத்தம்…
உன் னுட லெங்கும் வீசுகிறது…
உன் பிள்ளைகளையாவது சுத்தமாக்கு!