கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு செழித்த மானைக் கவ்விக்கொண்டு மரத்தில் தாவி மறைந்த சிறுத்தையைப் போல் ஊரில் புதிதாகக் கோயில் கட்டிக்கொண்டிருக்கும் செய்தி அவனின் நினைவைக் கவ்வி மறைந்தது. மரத்திலிருந்து சொட்டித் தெறிக்கும் இரத்தத் துளிகளாய் அவனின் நினைவுகள் கனிந்து, விரிந்து, சுருங்கி, காந்தி மறைந்தன.
எதிர்பாராத விதமாக எலக்ட்ரானிக் சிட்டி ஒயின் ஷாப்பில் ஊர்க்கார இளைஞர்களைச் சந்தித்தான் பூங்கான். இத்தனை காலத்தில் அவனுக்குக் கிடைத்த சிறு இன்ப அதிர்ச்சி அதுதான். அவனை அவர்களுக்கு யாரென்று தெரியவில்லை. தலைக்கேறிய போதையில் அவர்கள் பேசும் தெலுங்கை வைத்து அருகில் போய் விசாரித்தான். அறிமுகமானதும்தான் ஊரில் புதுக்கோயில் கட்டியிருக்கும் செய்தியையும் அதற்காக வரும் வாரம் ஊருக்குப் போவதையும் சொல்லி அவனையும் அழைத்தார்கள்.
பெங்களூருக்கோ வேறு ஊர்களுக்கோ பிழைக்கப் போகிறவர்கள் பெத்தவங்கள, கூட பொறந்தவங்களப் பாக்க, உறவுக்காரங்க நல்லது கெட்டதில் முறை செய்ய, கொலசாமியக் கும்பிட என்று வருடத்தில் ஒருமுறையாகிலும் சொந்த ஊர்களுக்குப் போவார்கள். இந்தப் பதினேழு வருடத்தில் பூங்கானுக்கு அப்படி எந்தச் சந்தர்ப்பங்களும் வந்ததே இல்லை. எல்லோரையும் போல அவன் பெங்களூருக்கு வேலை தேடி வந்தவனல்ல.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then