கௌதம சன்னா தமிழ் இந்து திசையில் ‘ஊர் – சேரி – காலனி: மாற்றத்திற்கான தருணம்’ என்ற கட்டுரையை எழுதியிருந்தார். இதன் தொடக்கத்தில் அவர் எழுப்பும் கேள்வி என்னவென்றால் “ஊர் என்பது இடைச் சாதியினர் வாழும் இடத்திற்கும், சேரி என்பது தீண்டத்தகாதவர்கள் அல்லது தலித்துகள் வாழும் இடத்திற்கான சொல்லாகவும் மாறியது எப்படி? எப்போது..?” என்பன ஆகும். அதாவது, இரு பெயர்களுக்குமான காரணத்துக்கும் காலத்துக்கும் விடை தேடுகிறார். இவற்றுக்கு அவர் தருகிற விளக்கமானது, “கால மாற்றம் நிகழ்ந்து ஊர் என்பது இடைச் சாதியினர் வாழும் இடமாகவும், சேரி என்னும் தலித்துகள் வாழும் பகுதி ‘காலனி’ (Colony) என்றும் வழங்கப்படுகிறது.” அவர் குறிப்பிடும் ‘கால மாற்றம்’ என்ன என்பதை விளக்கவில்லை. “வெற்றிக் கொள்ளப்பட்ட இந்தியா கொண்ட பிரிட்டனின் காலனியாகக் கருதப்பட்டது. அதாவது இங்கிலாந்தின் காலனி நாடு. இதன் விளைவாக காலனி என்கிற சொல் மீது ஏனோ மோகம் பற்றிக்கொண்டது” என்ற ‘சுவையான பின்னணி’யைக் கூறி, “சாதியவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட சாதியற்ற அவர்ண தலித்துகள் அவர்களை வெற்றிக் கொண்டதைக் குறிக்கும் வகையில் காலனி மக்கள் என்று அழைக்கத் தொடங்கினார்கள்” என்ற அவருடைய கூற்று சேரியும் ஊரும் காலங்காலமாகத் தனித்தனியாக இருந்தன; ஊரார்களால் சேரி வெற்றி கொள்ளப்பட்டது; சேரிக்கு மாற்றாகக் காலனி என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது என்ற பொருள்களைத் தருகின்றன. இது ஏற்புடையதாக இல்லை. மேலும், சேரியும் ஊரும் சங்க காலத்திலேயே இருப்பதனால் அவற்றுக்கு இடையேயான முரண் அக்காலத்திலிருந்து இருப்பதாக ஒரு புரிதலும் ஏற்படுகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then