கைவிடப்பட்ட அந்த மாட்டுக் கொட்டகைக்குள் இன்னும் சாணத்தின் வீச்சமிருந்தது. அந்த நண்பகலில் ஆங்காங்கே கீற்றுத் துளைகளின் வழித் தரையிறங்கிய ஒளித்தூண்கள் அக்குடிசையைத் தாங்கியிருப்பதாய் ஒரு தோற்ற மயக்கம். குறும்பாண்டி குடிசையின் உத்தரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றின் மறுமுனையை பீர்பாட்டிலின் கழுத்தில் முடிச்சிட்டான். பின் அதை வலப்புறமாய் உந்தித் தள்ளினான். கடிகார ஊசலாய் பீர்பாட்டில் அசைந்தாடத் தொடங்கியது. அதைக் குறிவைத்த உண்டிவில்லின் இழுபட்ட ரப்பர் பட்டைக்குள் அனலில் வாட்டிய களிமண் உருண்டை. இரண்டு கண்ணாடிக் கோப்பைகளை ஒன்றிணைத்து குறும்பாண்டி உருவாக்கியிருந்த மணல்கடிகாரத்தில் காலம் சரியத் தொடங்கியது. நாங்கள் இமைகளை மூடாமல் மூச்சு விடவும் மறந்தவர்களாய் அனைத்தையும் கவனித்திருந்தோம். முடுக்கிய கவணிலிருந்து விடுபட்ட எறிகல்லோ காற்றைக் கிழித்தவாறு பாட்டிலைத் தாக்கிச் சிதறச் செய்தது. பான்பராக்கில் ஊறிய எச்சிலை உமிழ்ந்தவாறு சூரக்கிளி “வக்காலி யாருகிட்ட” என்றான். அடுத்த நொடியில் சூரக்கிளியின் வயிற்றுக்குள் உடைந்த பீர்பாட்டிலை குறும்பாண்டி சொருகியிருந்தான். நான் முதல் ஆளாய் குடிசையைச் சுற்றியிருந்த சீமைக்கருவேலம் புதர்களுக்குள் ஆடை கிழிபடுவதையும் பொருட்படுத்தாமல் பதறியோடினேன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then