நடுநாட்டு மக்கள் மொழியை நவீன இலக்கியத்தில் நிலைபெறச் செய்தவர் இராசேந்திர சோழன் (1945 – 2024). இவர் சிறுகதை, நாவல், நாடகம், தத்துவம், வரலாறு, அறிவியல் எனப் பல்வேறு பொருண்மைகளில் நூல்களை எழுதியிருக்கிறார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். பணிப் பாதுகாப்புக் கருதி தன் பெயரை அஸ்வகோஷ் என மாற்றிக்கொண்டார். தான் எழுதிய இரண்டு பெயர்களிலுமே நன்கு அறியப்பட்டவர்; அப்பெயர்களுக்குப் பெருமை சேர்த்தவர். ஆனால், தன் எழுத்துக்குரிய அங்கீகாரங்களைப் பெறாதவர். இடதுசாரி இயக்கத்தில் இருந்துகொண்டே அதன் முரண்களைப் பேசியவர். இயக்கத்தின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் புனைவுகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாவதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளார். நடுநாட்டு மக்களின் இயல்பான பேச்சு வழக்கினை எவ்வித தணிக்கைக்கும் உட்படுத்தாமல் எழுபதுகளில் இவர் எழுதிய புனைவுகள் வட்டார எழுத்துக்கு முன்மாதிரிகளாக இருக்கின்றன. வட்டார எழுத்தின் விளைநிலமாகத் தென் தமிழகத்தையே விமர்சகர்கள் எப்போதும் முன்னிறுத்துகின்றனர். தன்னுடைய ‘எட்டுக் கதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலமாக அந்தப் பார்வையை வட தமிழகத்தின் பக்கம் திருப்பிய மூத்த படைப்பாளி இராசேந்திர சோழன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then