டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரிடம் பேசுவதென்பது, பலவித பயனுள்ள தகவல்களை மூளையில் ஏற்றிக்கொள்வதற்கும், மனிதர்களைப் பற்றியும் மற்ற பல விஷயங்களைப் பற்றியும் சில புதிய பார்வைகளைப் பெறுவதற்குமான வாய்ப்பு. அவரோடு பழகினால், உங்களால் அவருடன் உரையாட முடியும். எனினும், அவரைப் பேசவைத்துக் கேட்பதே உங்களுக்கு மேலும் நன்மை பயக்கும். அப்படியொரு பேசும் கலைக்களஞ்சியம் அவர்.
மெத்தவும் கற்றுணர்ந்த டாக்டர் அம்பேத்கருக்குச் சில விஷயங்களின் மீதே ஆர்வமுண்டு. வாசிப்பே அவருடைய ஒரே ஈடுபாடு. எழுதுவது கூட இரண்டாம்பட்சம்தான். உள்ளிருந்து உந்தப்பட்டால் மட்டுமே எழுதுபவர். ஆனால், எப்போதும் படித்தபடி இருப்பவர். பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அவரிடம் ஆலோசனைக் கேட்கும் நல்வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைத்துள்ளது. விரிவாகப் பேசுவதற்கும் அவர் தயங்கியது இல்லை. இம்முறை, திரைப்படங்கள், அவற்றின் தயாரிப்பாளர்கள், திரைப்படங்களின் செயல்பாடுகள், அவற்றைப் பற்றி வேறு என்ன நினைக்கிறார் என்பதை அறிய முயன்றேன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then