இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த மனநலக் காப்பகத்தின் உதவியாளராக நான் பணியில் சேர்ந்திருந்த அதே நாளில்தான் தாடிக்காரன் பெரிய அடர்நீல இரும்புப் பெட்டியுடன் சிகிச்சை பெறுவதற்காக சேர்ந்திருந்தான். என்னைவிட அந்த மனநலக் காப்பகத்தின் விதிமுறைகளும் சுற்றுப்புறமும் சூழ்நிலைகளும் அவனுக்கு எளிதாகப் பழகிவிட்டன. அவனுக்கென்று அவனுடைய பெற்றோர் இட்ட பெயர், வாயில் நுழையாத ஆங்கிலோ இந்திய பாணியிலான பெயராக இருந்ததால் நான் உட்பட அனைவரும் அவனைத் தாடிக்காரன் என்று அழைக்கவும் அடையாளப்படுத்தவும் பழகியிருந்தோம். திரைப்படங்களில் காட்டுவதுபோல எங்கள் காப்பகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள் கைகளிலும் கால்களிலும் சங்கிலியால் பூட்டப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்படுபவர்களாக என்றுமே இருந்ததில்லை. மாறாக, அவர்களுடைய மனப்பிறழ்வின் வீரியத்தைப் பொறுத்து மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்: அதிகமாக மருத்துவ மேற்பார்வை தேவைப்படுபவர்கள்; மிதமான மருத்துவ மேற்பார்வை தேவைப்படுபவர்கள்; லேசான மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டு, தனியறை ஒதுக்கப்பட்டு, குறைவான மருத்துவ மேற்பார்வைக்கு உள்ளாக்கப்படுபவர்கள். தாடிக்காரன் இதில் மூன்றாவது வகையைச் சேர்ந்தவனாக இருந்தான். நாங்கள் பெயரிட்டதற்கு ஏற்றது போலவே கன்னம் முழுவதும் அடர்த்தியான தாடியுடனே எப்போதும் உலவுவான். ஒருவகையில் அவனுடைய நலிந்த ஒட்டிய கன்னங்களை மறைப்பதற்குத் தாடி வசதியாகவே இருந்தது. எங்களுடைய கணிப்புப்படி அவனுக்கு நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து வயது வரை இருக்கலாம். பெரும்பாலும் பழைய, சாயம்போன, அளவில் அவனைவிட பெரிய சட்டைகளையும் பேண்டுகளையுமே அணிந்திருப்பான். சில நேரங்களில் இடுப்பில் நிற்காமல் கீழிறங்கும் பேண்ட்டை ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி அவன் நடந்து செல்வதைப் பார்த்து எங்களுக்குள் கேலி செய்து சிரித்துக்கொள்வோம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then