வானத்தில் சந்திரன் மெல்ல தெரிய ஆரம்பித்தது. பெருமூச்சு வாங்கிக்கொண்டு ஓடினான் மாறன். அவனது மூச்சு அனலாக வெளியேறிக்கொண்டிருந்தது. அவனது நாக்குகள் ஈரப்பதத்தை உணர்ந்து நெடுநேரம் ஆகியிருந்தது. கண்களில் வழிந்துகொண்டிருக்கும் நீர்த்திவலைகள் காற்றில் சிதறும்படியான வேகத்தோடு அவிழ்ந்த கைலியைத் தனது தோளின் மீது போட்டுக்கொண்டு “அப்பா……பா” எனக் கத்திக்கொண்டே ஓடிவந்தான். ஊர்த் தெருவிலிருந்து தனது தெருவரை எல்லோரும் தன்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் சிறிதும் அவன் மனதில் எழவில்லை. குறிப்பிட்ட நேர இடைவெளியில் தன்னை யாரோ துரத்துவது போல பின்புறம் பார்த்துப் பார்த்து ஓடினான். “எதயோ பாத்து புள்ள இப்டி பயந்து வராண்டியம்மா” என்றவாறு வாய்மேல் கைவைத்து பார்த்துக்கொண்டிருந்தார்கள் அனைவரும். இடையிடையில் “ஏம்பா ஓட்ர”, “என்னாச்சு டா”, “டே சின்னா மொவனே”, “டேய் உன் கைலி” எனப் பல குரல்கள் வந்துகொண்டிருந்தன. எதையும் பொருட்படுத்தாமல் வீட்டை நோக்கி ஓடிவந்தான் மாறன். “…ப்பா… பா…” எனக் கதறியவன் “மைனாப்பா மைனாப்பா” எனக் குழம்பிய மனநிலையில் கத்த ஆரம்பித்தான். பதறிப்போய் பார்த்த சின்னாவிற்கும் அல்லிக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் அவனை அணைத்து “என்னடா… என்னடா” என்று கேட்டார்கள். அவன் “மைனா… மைனா” என்றபடியே மயங்கி விழுந்தான்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then