செய்யாத குற்றத்திற்காக மதுரை மாநகரில் கண்ணகியின் கணவன் கோவலன் பாண்டிய மன்னனால் படுகொலை செய்யப்படுகிறான். தன் கணவனுக்காக மக்களைப் பார்த்து,
“சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டு கொல்
ஈன்ற குளவி எடுத்து வளர்க்கும் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்”
என்று கண்ணகி நீதி கேட்டு வீதியில் இறங்கினாள். நீதி கிடைக்காததால் வெகுண்டு எழுந்து மதுரையையே தீயிட்டு அழிக்கிறாள். அதேவேளையில் வேங்கைவயலில் தலித் மக்கள் மீது நடத்தப்படுகிற கொடுமைகளைக் கண்டு அம்மக்கள் தமிழ்ச் சமூகத்தைப் பார்த்து இதே கேள்விகளைக் கேட்பதாகவே கொள்ள வேண்டியுள்ளது. இன்னும் கூடுதலாக, ‘அறத்தோடு செயல்படுகிற’ ஊடகங்கள், ‘சமூக நீதியைப் பேசுகிற’ முற்போக்காளர்கள் என அனைவர் முன்பும் இத்தகைய கேள்விகள் வந்து நிற்கவே செய்கின்றன. நீதிக்காகப் போராடிய கண்ணகிக்குச் சிலை வைத்துக் கொண்டாடுகிற திமுக அரசுதான் வேங்கைவயல் தலித் மக்களுக்கு மாபெரும் அநீதியை இழைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியைப் போடுகிறது. “செய்யாத குற்றத்தினைச் செய்ததாக ஒப்புக்கொள்ளச் சொல்வதற்குப் பதிலாக எங்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்” என்று அம்மக்கள் அரசிடம் முறையிடுகின்றனர்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then