15
பறையர் அடையாள அரசியல் பேச விரும்புவோரில் பலர் தங்களைச் சைவர்கள் என்றும், சிவன் வழி வந்தவர்கள் என்றும் கூறிக்கொள்ள விரும்புவதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம், பறையர்களைக் குறிக்கத் தென்பகுதிகளில் வழங்கப்படும் சாம்பான் / சாம்பவர் என்கிற பெயரே. சாம்பான் என்பது இன்றைக்குச் சிவனைக் குறிப்பதாக அறியப்படுவதால்தான் இந்த அர்த்தம். சிவனைக் குறித்த ‘சுடுகாட்டைக் காத்தவன்’ என்ற வழக்காறும் இம்முடிவுக்குத் துணைபுரிகிறது. கடவுள் வழிவந்தவர்கள் அல்லது கடவுள் தங்கள் குலத்தைச் சேர்ந்தவர் என்று தொடர்ந்து ஏதுமற்றவர்களாகக் கூறப்படும் சமூக மக்கள் கூறுவதன் உளவியலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உரிமைக் கோரலை முற்றிலும் எதிர்மறையானது என்று கூற முடியாது. அதேவேளையில், இவ்வாறு சைவ நிலைப்பாடுடையவர்கள் ஒடுக்கப்பட்டோரிடையே பிற நிலைப்பாடுகள் கொண்ட தரப்பினரை ஒற்றை நிலையில் நின்று தாக்குபவர்களாக இருக்கின்றனர். நந்தனார் சைவ அடியாராக இருந்தார் என்பதும் இந்தச் சைவ உரிமைக் கோரலுக்கு முக்கியமான காரணமாகும். நந்தனார் சைவ அடியாராக இருந்தார் என்று கூறும்போது பண்ணையடிமையாக இருந்தவர் என்ற அர்த்தமும் இணைந்தேதான் கிடைக்கிறது. ஆனால், இதிலுள்ள முரண் என்னவென்றால், நந்தன் மன்னன் என்னும் நினைவைத் தின்று அடிமை என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்பியிருப்பதே சைவம்தான். இவற்றையே இந்த அத்தியாயத்தில் பார்க்கவிருக்கிறோம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then