“எடுத்த எடுப்புலேயா மம்பட்டிய எடுத்து வெட்டுவாங்க? காவு வாங்கிப்புடாதா? ரத்தக் காவோட வுடுமா மண்ணு? போன வருசமே மயமாரி இல்லெ. கொல்ல நல்லாவும் வௌயல. இந்த வருசமாச்சும் மய நல்லா பேஞ்சி, கொல்ல நல்லா வௌயணுமின்னு கீய வியிந்து கும்புட்டுட்டு மம்பட்டிய எடு” என்று மாரியம்மா சொன்னதும், ஓர் இலந்தை முள் செடியை வெட்டப்போன துரைசாமி மண்வெட்டியைக் கீழே வைத்துவிட்டுக் கிழக்கு முகமாக விழுந்து கும்பிட்டான். அவன் தரையில் விழுந்து கும்பிட்டதைப் பார்த்ததும், சங்கரும் ராணியும் தாங்களாகவே விழுந்து கும்பிட்டனர். அவர்கள் கும்பிட்டதைப் பார்த்ததும் மாரியம்மாவுக்குச் சிரிப்பு வந்தது. “கிராக்குக்குப் பொறந்ததுங்க” என்று சொன்னாள்.
“இந்த வருசம் என்னா கதயா ஆவப்போவுதோ? நாம்ப ஒண்ணு நெனச்சா காடு ஒண்ணு நெனைக்குது. மானம் பேஞ்சிக் கெடுக்கப்போவுதா? காஞ்சிக் கெடுக்கப்போவுதா, யாரு கண்டா?” என்று சொல்லிவிட்டு மண்வெட்டியை எடுத்து இலந்தை முள் செடியை வெட்டினான் துரைசாமி. அடுத்து, கண்ணில் பட்ட புல், பூண்டு, நுனா செடிகள் என்று வெட்ட ஆரம்பித்தான். அவன் வெட்டிப்போடுகிற செடிகளை எடுத்து ஒன்றுசேர்த்துக் குவிப்பதற்காக சங்கரும் ராணியும் போட்டி போட்டனர். “இந்தச் செடிய வெட்டுப்பா, இந்த முள்ள வெட்டுப்பா” என்று சங்கரும் ராணியும் ஒவ்வொரு செடியின் முன்னும் ஓடிச் சென்று காட்டினர்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then