ஒப்பந்தம்
பெருந்தொற்றின் பேரலையில் இறந்துபோன பீகார்காரனின் இறப்புச் சான்றிதழை, முடி திருத்தகத்தின் முதலாளியிடமிருந்து என்ன செய்வதென்று புரியாமல் பீகார்காரி, தனது ஒரு வயது மகளைப் போலவே மலங்க மலங்க விழித்தபடி வாங்கி வைத்துக்கொண்டாள். கடையைத் திறக்க அரசாங்கம் அனுமதியளிக்காது. திறந்தாலும் இனி அதை நடத்துவதற்கு வேறொரு ஆளைத் தேட வேண்டும். ஊரைவிட்டுப் போனவர்கள் திரும்புவார்களென்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. குழந்தையையும் பீகார்காரியையும் எத்தனை நாளைக்குத் தனியாக வைத்திருக்க முடியுமென்று, வரும் சம்பளம் சாப்பாட்டுக்காவது ஆகட்டுமென முதலாளி, அவளைப் பக்கத்திலிருந்த சிறிய மருத்துவமனையில் வேலைக்கு அனுப்பினார்.
பீகார்காரிக்கு மருத்துவம் பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும் காலையிலிருந்து இரவு வரை அங்கு வேலை சரியாக இருந்தது. குழந்தைக்குப் பால், செர்லாக்ஸ், பிரட், அதுபோக காய்ச்சல் வந்தால் மருந்து, மாத்திரை என அன்றாடத்திற்குச் சிரமமில்லை. வீட்டு வாடகையில் முக்கால் பங்குதான் சம்பளம் என்றாலும் அதிகம் சம்பாதிப்பதுபோல எண்ணிக்கையில் தெரிந்தது அவளுக்கு. பெருந்தொற்றின் இரண்டாவது பேரலை தொடங்கியபோது அவள் நோயாளிகளுக்கான பதிவுச்சீட்டுக் கொடுக்கும் பணிக்கு மாறினாள். வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போதெல்லாம் மூடியிருக்கும் கடையைப் பார்க்காமல் படியேற மாட்டாள். ஒன்றிரண்டு கடைகள் தவணை முறையில் திறக்கத் தொடங்கியிருந்தன. இந்தக் கடை மட்டும் இன்னும் திறக்காதது அவளுக்குக் குழப்பமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் திறக்கும்போது தெரியப்போகும் பழைமையின் நினைவேக்கம் பயமுறுத்தத் தயாராகவும் இருந்தது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then