கறுப்புக் கலை இலக்கியங்களின் வரலாறு அடிமைத்தன காலத்தின் வாய்வழிக் கதைகள், ஆன்மிகப் பாடல்கள், அடிமைப் பயணக் குறிப்புகள் ஆகியவற்றிலிருந்து தொடங்குகிறது. அவை ஆப்பிரிக்க மக்களின் இடப்பெயர்வு, அடிமை வியாபாரம், காலனித்துவம் ஆகியவை உருவாக்கிய சமூக, கலாச்சார, உணர்ச்சிப் பிணக்குகளின் வெளிப்பாடாக வளர்ந்தன. 17ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை, கறுப்பு எழுத்தாளர்களின் எழுத்துகள் இனவெறி எதிர்ப்பு, சுய அடையாளம், மனித உரிமைக்கான உரிமைகோரல் என்ற நிலையில் இருந்தன. அதன் பிறகான காலங்களில் அரசியல், பொருளாதார மாற்றங்களினால் உருவான வாழ்வியல் மாற்றங்கள் கலை இலக்கியங்களில் பிரதிபலித்தன.
அடிமைத்தனத்தை அனுபவித்தோரின் வாழ்க்கையைச் சாட்சியப்படுத்திக் காட்டிய எழுத்துகள் இன்றளவும் கறுப்பு இலக்கியத்தின் முதன்மையான ஆவணங்களாகக் கருதப்படுகின்றன. பெட்ரிக் டக்லஸ் (Frederick Douglass), ஓலாடா ஈக்வியனோ (Olaudah Equiano) போன்றோரின் சுயசரிதைகள் தனிப்பட்ட அனுபவத்தை மட்டுமல்லாது சமூக நீதியின் வலியுறுத்தலாகவும் கறுப்புச் சமூகத்தின் மனிதத் தன்மை, அறிவுத்திறன், எதிர்ப்புக் குரல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுவதாகவும் இருந்தன.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





