பரட்டை என்கிற தியாபிலஸ் அப்பாவு (1940-2005), இந்தப் பெயர் கடந்த 40 வருடங்களாக தமிழக / இந்திய இறையியல் வட்டாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பெயரை உச்சரிக்காத இறையியலாளர்களோ, இறையியல் கல்லூரிகளோ இருக்க முடியாது. பரட்டை என்கிற பெயரே அதனுடைய இருப்பை எளிதாக நமக்குச் சொல்லிவிடுவதாக இருக்கிறது. சீர்வாராத கலைந்த கேசம்; எப்போது கொட்டி கீழே விழும் என்று தெரியாத அளவில் வாய் நிறைந்திருக்கிற வெற்றிலை பாக்கு; கசங்கிப் போன உடை; கரகரத்த குரல்; கண்ணில் மாட்ட வேண்டிய கண்ணாடியைக் கழுத்தில் தாங்கிக்கொண்டிருக்கும் கயிறு; அதில் ஊஞ்சலாடும் பேனா; தன்னுடைய பெயரை விடுத்து கிராமத்து மக்கள் சூட்டிய இந்தப் பெயர்தான் பரட்டையின் அடையாளம். மதுரையில் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் தொடர்புத் துறை பேராசிரியராகப் பணியாற்றி, நிறைவு பெற்று, கடவுளின் மடியில் இளைப்பாறிக்கொண்டிருக்கிற ஓர் ஆன்மா.
பரட்டை என்பது வெறும் பெயர் அல்ல, அது தனியானதொரு சிந்தனைப் பள்ளி. இன்றிருக்கிற பல நூற்றுக்கணக்கான ஆயர்களின் பண்பாட்டுப் பேராசிரியர். கிறிஸ்தவர்களின் புனிதமான வழிபாட்டுத் தளம்(!) என்கிற கட்டமைப்பை ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக் களம் என்று மாற்றி அமைத்தவர் பரட்டை. வழிபாட்டுத் தளத்தின் மொழி, பாடல்கள், பாரம்பரிய இசை, கட்டுப்பாடுகளை மீறாமல் இசைக்கப்பட்ட இசைக்கருவிகள், பழைமை மாறாமல் கடவுளைப் போற்றும் பாடல்களின் கவிதையியல் நடை என எல்லாவற்றையும் ஒடுக்கப்பட்டவர்களின் களமாக மாற்றியமைத்து அதில் வெற்றியும் கண்டவர் பரட்டை. பரட்டை ஒரு கவிஞர்; நாடக ஆசிரியர்; இசையமைப்பாளர்; பேராசிரியர்; நாட்டார் ஆய்வாளர்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





