ரோஹித் வெமுலாவின் பத்தாம் நினைவுநாளை முன்னிட்டு ஜனவரி 17, 2026 அன்று ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் நான் வாசித்த உரையின் விரிந்த வடிவம்.
ரோஹித் வெமுலா நமக்கும், வருங்காலத்துக்கும் விட்டுச் சென்ற கடிதத்தை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியிருக்கிறது. நமது மனதைவிட்டு அகல மறுக்கும் இந்த வரிகள் –
“என் ஆன்மாவுக்கும் என் உடலுக்கும் இடையில் பெரும் இடைவெளி உருவாகி, வளர்ந்தவண்ணம் உள்ளதை உணர்கிறேன் – நான் ஒரு அரக்கனாக மாறிவிட்டேன்.”
ஆன்மா என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்தச் சொல்லுக்கு வல்லமை உண்டு. மானுடத்தன்மையை, இந்த உலகத்தின் அழகையும் கொடூரத்தையும் ஒருசேர உணர வைக்கும் – எளிதில் பிடிபடாத – ஏதோவொன்றை அது குறிக்கிறது. நீதியான, மகிழ்ச்சியான எதிர்காலத்தைக் கற்பனை செய்து பார்க்கத் துணியும் மனநிலையை, இந்த உலகத்தை மாற்றியமைக்க வேண்டும், நாம் மாற வேண்டும் என்ற வேட்கையை வெளிபடுத்தும் சொல்லாகவும் அது உள்ளது.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





