அனல் நட்சத்திரத்தின் பிரியத்துக்குரிய மே மாதத்தின் வெய்யிலை அவமானப்படுத்தும் விதமாகக் கோடை விடுமுறையின் திளைப்பை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாதென்கிற வைராக்கியத்துடன் நாய் பொறை, ஏழாங்கல், எங்க வீட்டு நாய், கல்லா மண்ணா, பச்சா, வடபாயாசம் எனக் கோசலையின் வீடிருக்கும் ஐயா முதலி தெருவிலிருந்து பஜார் தெரு, காக்ஸ் தெரு, சர் லாசரஸ் தெரு வரைக்கும் சிறுவர்கள், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தெருவில் போகவர இருக்கிற பெரியவர்கள் இந்தப் பிள்ளைகளை சபித்துக் கொண்டும், அவர்களிடம் வாக்குவாதம் செய்தவாரும் கடந்தார்கள்.
ஒரு குள்ளச் சிறுமி மிக உயரமானவனின் கையைப் பிடித்து ஆங்காரத்துடன் நடந்து வருவதிலிருக்கும் சுவாரசியத்திற்காக ஆட்டத்தின் சில மணித்துளிகளைத் தியாகம் செய்து அவர்களிருவரையும் பிள்ளைகள் பார்த்தனர். கோசலைக்கும், கணேசனுக்கும் இந்தத் தெருக்களின் பிள்ளைகளெல்லாம் பழக்கம் இல்லை என்பதால் இவர்களிருவரின் ஆவேசப்பயணத்தின் தோற்றுவாய் என்னவாக இருக்குமென்கிற கேள்வியை கேட்க முடியாத பரிதவிப்பை அந்த பிள்ளைகள் பார்வையால் வெளிப்படுத்தினர். தெருப்பிள்ளைகள் பார்க்கிறார்கள் என்பதை அவள் உணர்ந்தாலும் அவர்களின் கவனக் குவிப்பு அவளின் கோபத்தை நீர்த்துப் போகச் செய்யவில்லை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then