மட்டையிலும் தரையிலும் பட்டு பந்து எழுப்பும் விசைச்சத்தமும் சிறுவர்களின் சந்தோஷக் கூச்சலும் பச்சைமுத்துவை மாமரத்தின் மறைவிலிருந்து வெளியே இழுத்து வந்தது. சென்றமுறை பட்ட அவமானமெல்லாம் சொடக்கிடும் பொழுதில் ஆவியாகிப்போய்விட, கால்சட்டைப் பைக்குள் இருக்கும் புதிய பந்தை கையில் எடுத்துக்கொண்டு அவர்களின் அருகில் சென்றான்.
பையன்கள் சிறிதும் பச்சையைப் பொருட்படுத்தாது தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு பையன் அடித்ததில் பந்து ஏரி மேடு தாண்டிச் சென்று விழுந்தது. அடித்தவனைத் திட்டிக்கொண்டே இரண்டு சிறுவர்கள் பந்தைத் தேடிப்போனார்கள். அங்கிருக்கும் சிறுவர்களிலேயே மூத்தவனான எட்டாம் வகுப்புப் படிக்கும் கணேசன்தான் அங்கு அணித்தலைவன். மற்ற பையன்கள் பந்து இல்லாததால் ஆங்காங்கே மரத்தடி நிழலில் கலைந்து நின்றார்கள்.
பச்சை கணேசனிடம் தயங்கி “அண்ண..அண்ண.. என்ட்ட புதூ பந்து இருக்குண்ண…என்னியும் ஆட்டத்துல சேத்துக்குங்குங்கண்ண” என்று குரல்வளை வளைந்து இறைஞ்சினான். “எதுக்கு.?. ஆட்டத்துக்கு இடயிலேயே அப்பா கூப்ட்டாரு அம்மா கூப்ட்டுச்சுன்னு ஓடிருவ” விரட்டுவது போல நீ வேண்டாம் என வலது கையால் சைகை காண்பித்தான் கணேசன். “அண்ணன் சத்தியமா இன்னைக்கு ஆட்டம் முடியாம போவ மாட்டன் ண்ண” என்று கணேசனின் உள்ளங்கையைப் பிடித்து அதில் அடித்துச் சத்தியம் செய்துகொடுத்தான் பச்சை. சாக்கில் இருந்த பொருட்களையெல்லாம் ஒரு முறை சரி பார்த்துக்கொண்டான்
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then