பூமிக்கடியிலும் வானத்திற்கு அப்பாலும் பொக்கிஷங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், சூஃபி கவிஞரான நிஜாமியோ `பொக்கிஷத்தின் சாவி, சூஃபியின் நாக்கில் இருக்கிறது’ என்கிறார். ஒரு மொழியிலிருந்து நாம் அர்த்தத்தைப் பெறுகிறோமா ஞானத்தைப் பெறுகிறோமா என்பது நம்முடைய மன அமைப்பைப் பொருத்தது. ஒருவர் எதை, எங்கே, எப்படி, எப்போது சொல்கிறார் என்பதை வைத்துத்தான் அவர் ஆளுமையாகவும் அடிப்படை அறிவுடையவராகவும் மதிக்கப்படுகிறார். தனக்குத் தோன்றியதை எந்தச் சல்லடையுமில்லாமல் அப்படியே கொட்டிவிடுகிறவர் கவனிக்கப்படலாமே தவிர, காலத்தின் பாதையில் நின்றுநிலைக்க வழியே இல்லை. இந்த இடத்தில் என்னை அதிகமும் கவர்ந்த ராபியா பஸ்ரி பற்றிச் சொல்லத் தோன்றுகிறது.
அவர், கி.பி.எழுநூறுகளில் வாழ்ந்த பெண் சூஃபி. இறைவனைக் காதலனாகவும் நண்பனாகவும் காதலியாகவும் அணுகிய சூஃபிகளில் தன் வாழ்விலும் பிறர் வாழ்விலும் புரட்சிகரச் சிந்தனைகளை விதைத்தவராக அவர் பார்க்கப்படுகிறார். பஸ்ரா நகரின் விபச்சார விடுதியில் இருந்தபோதிலும், அவர் ஏற்றிய ஞானவிளக்கின் ஒளி இன்றும் அணையாதிருக்கிறது. இறைக்காதலில் தன்னையே கரைத்துக்கொண்ட அந்த மகாமனுஷி இறுதிவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. நாட்டின் அரசரும் செல்வந்தர்களும் ஏன் தன்னை ஒத்த சூஃபிகளும் திருமணம் செய்துகொள்ள முன் வந்த நிலையிலும் அவர் அவர்களிடம் கேட்ட கேள்விகள், சூஃபித்துவத்தின் விளக்கங்களாகச் சொல்லப்படுகின்றன.
அந்தக் காலத்தில் ஹசன் பசரி என்கிற புகழ்பெற்ற சூஃபியுடன் ராபியாவைத் தொடர்புப்படுத்திப் பேசிய தகவலுண்டு. திருமணம்வரை அவ்வுறவு சென்றதாகவும் ராபியா கேட்ட கேள்விக்கு ஹசன் பசரியால் பதில் சொல்ல முடியாமல் போனதால் அத்திருமணம் தடைபட்டதாகவும் தெரிகிறது. `நான் இறக்கும்போது நம்பிக்கையுள்ளவளாக இறப்பேனா இல்லை, அவநம்பிக்கையுடையவளாக இறப்பேனா’ என்ற கேள்வியை ஹசனிடம் ராபியா கேட்டிருக்கிறார். அதற்கு அவர், `அது இறைவன் மட்டுமே அறிந்த மறைவான விஷயமாகும்’ என்றிருக்கிறார். அதேபோல மூன்று கேள்விகள். எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலை ஹசன் சொல்லியிருக்கிறார். `நான் கேட்கும் எந்தக் கேள்விக்கும் தங்களிடம் பதிலில்லை. எல்லாக் கேள்விகளுக்குமான பதிலை இறைவனே அறிவான் என்கிறீர்கள். எனில், என்னைத் திருமணம் செய்துகொள்வதற்கான அனுமதியையும் நீங்கள் அவரிடமல்லவா வாங்கவேண்டும்’ என்றிருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையே நடந்துள்ள மற்றோர் உரையாடல் இன்னும் சுவாரஸ்யமானது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then