தலித் வரலாறு பல தரப்பட்டவை; நீண்ட காலத்தவை; தொடரக் கூடியவை; அது கூட்டுச் செயற்பாட்டுக்கு உந்தக் கூடியவை. பல்வேறு கடந்த கால அனுபவங்களின் திரட்சியாக நம்மிடம் வந்தடைந்திருக்கின்றன. அவற்றிலிருந்து விமர்சன ரீதியாக கற்றுக்கொள்வதற்கும், வளர்த்தெடுப்பதற்கும் அம்சங்கள் இருக்கின்றன.
பொதுவாகத் தலித் வரலாறு எனும்போது பெரும்பாலும் ஆளுமைகளின் வரலாறாகவே இருக்கிறது. ஆளுமைகளின் தனித்தன்மைகளை மறுக்க முடியாது என்றாலும் அதையும் தாண்ட வேண்டியிருக்கிறது. அப்போதுதான் மைய நீரோட்ட வரலாற்றியலை எதிர்கொள்ள முடியும். இங்கு நாம் புதிய வரலாற்றுக்கான தரவுகளை மட்டுமல்ல, தரவுகளை எவ்வாறு அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் முறையியலையும் கட்டமைத்தாக வேண்டியுள்ளது.
பின்வரும் பகுதியில் தமிழ்நாட்டில் தலித் சார்ந்து / தலித் பங்கெடுப்பில் நடந்த முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அவை பற்றிய அடிப்படையான தகவல்களை மட்டும் சிறு குறிப்பாகக் கொடுத்துள்ளோம். இவை தவிர வேறு சம்பவங்களும் இருக்கின்றன.
இக்குறிப்புகள் ஆளுமைகள் பற்றியானதல்ல. மாறாக வரலாற்றுச் சம்பவங்கள் பற்றியது. இச்சம்பவங்கள் ஊடாக ஆளுமைகளும் இருக்கிறார்கள். தலித் வரலாறு என்பது கூட்டுச் செயற்பாடுகளால் ஆனது என்பதை இப்பகுதி கூறும். இக்குறிப்புகள் பெரும்பாலும் ஆவணங்கள் சார்ந்து எழுதப்பட்டன. ஆவணங்களைத் தாண்டியும் வழக்காறுகளிலிருந்தும் திரட்டும்போது இத்தொகை அதிகரிக்கும். தலித்துகள் எந்த அளவிற்கு பங்களித்திருக்கிறார்கள் என்பதை இக்குறிப்புகள் மூலம் அறிந்துகொள்ளலாம்; இரு நூற்றாண்டு கால வரலாற்றின் குறிப்பான தருணங்களை இனங்காணலாம்.
தேர்வும் தொகுப்பும்: ஸ்டாலின் ராஜாங்கம்
முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம்: மீனாம்பாளும் நடராசனும்
இருபதாம் நூற்றாண்டு தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கியமான நிகழ்வு இந்தி எதிர்ப்புப் போராட்டம். பல கட்டமாக நடந்த இப்போராட்டத்தின் முதல் கட்டம் 1938 – 39 ஆண்டுகளில் நடந்தது. திராவிட இயக்கத்திற்கு வெகுஜன அந்தஸ்தைத் திரட்டித் தந்த போராட்டம் இது. இதன் உச்சமாக இரண்டு பேரின் உயிர்ப்பலி அமைந்தது. அதில் முதலாவதாக இறந்த (15 சனவரி, 1939) நடராசன் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இரண்டாவதாக இறந்தவர் தாளமுத்து. இந்த வரலாற்று வரிசை தாளமுத்து – நடராசன் என்று மாறிக் கிடக்கிறது. மாறாக இந்த வரிசை நடராசன் – தாளமுத்து என்றே இருக்க வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் தொண்டராக நடராசன் இறந்தார் என்பது மட்டுமல்ல. போராட்டத்தை வழிநடத்திய தலைவர்களில் ஒருவராக அன்னை மீனாம்பாள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போராட்டம் பற்றி எழுதும்போது மீனாம்பாள் பற்றி ஒரு பெயராகக் குறிப்பிடுவார்களேயன்றி விரிவான பங்கைப் பற்றிச் சொல்வதில்லை. சென்னை நகரத்தில் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரப் பொறுப்பை மீனாம்பாள் ஏற்றிருந்தார். அதுவரை படித்தவர்களின் கருத்தியல் பிரச்சாரமாக இருந்த எதிர்ப்பு, வெகுஜனப் போராட்டமாக மாறியதற்கு மீனாம்பாளின் பங்கெடுப்பே காரணம். அவர் தலைமையில் ஏராளமான ஆதிதிராவிடர்கள் இந்தி எதிர்ப்புத் தொண்டர்களாக கலந்துகொண்டனர்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then