தென்னாற்காடு தலித் தலைவர்கள் – அருள் முத்துக்குமரன்

பட்டியல் சமூக மக்களின் இயக்கமான ஃபெடரேஷன் பற்றிப் பேசும்போது வட ஆற்காடு பகுதியை மையமாக வைத்தே பேசப்படுகிறது. இதற்குக் காரணம் இல்லாமலில்லை. அந்தப் பகுதியில் பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, உரிமை ரத்தினம், ஜே.ஜே.தாஸ், தசரதன், எஸ்.ஆர்.முனுசாமி, மூர்த்தி, செட்டிகுளம் குப்புசாமி, பெத்தகோணி அண்ணாமலை போன்ற பல தலைவர்கள் ஃபெடரேஷனுக்காகச் செயல்பட்டனர்.

தென் ஆற்காடு, தஞ்சைப் பகுதிகளிலோ கட்சி தொடங்கி குறைந்தது பத்து ஆண்டுகள் மட்டுமே ஃபெடரேஷனில் செயல்பட்டுள்ளனர். வட ஆற்காடு பகுதி போல் இல்லாமல் தென் ஆற்காடு, தஞ்சைப் பகுதிகளில் செயல்பட்ட ஃபெடரேஷன் தலைவர்கள் மாற்று இயக்கத்துக்குச் சென்று விட்டனர். குறிப்பாக எல்.இளையபெருமாள், குப்புசாமி, புலவர் ஆறுமுகம், சடகோபன், கே.பி.எஸ்.மணி, நடுத்திட்டு கூத்தரசன் போன்றோர் தொடக்கத்தில் செயல்பட்டாலும் பிற்காலத்தில் காங்கிரஸ், திமுக போன்ற இயக்கங்களில் இணைந்து விட்டனர். அவர்கள் ஃபெடரேஷனில் செயலாற்றியது குறைந்த காலமே என்றாலும் தம் சமூகம் சார்ந்த நலனில் தம்முடைய இறுதிக்காலம் வரை செயல்பட்டுள்ளனர்.

 

நடுத்திட்டு தளபதி கூத்தரசன்

ஃபெடரேஷன் அமைப்பில் செயல்பட்ட சில தலைவர்களைத் தவிர மற்ற செயற்பாட்டாளர்கள் பற்றிய குறைந்தபட்ச தகவல்கள் கூட நமக்குக் கிடைக்கவில்லை. சிலரது பெயர்கள் மட்டுமே தெரிகிறது. அதனால் கிடைத்த குறைந்தபட்சத் தகவல்களையும் ஆவணங்களையும் கொண்டு எழுதுகிறேன். ஃபெடரேஷன் அமைப்பில் மயிலாடுதுறை வட்டாரத்தில் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் இருவர். ஒருவர் கே.பி.எஸ். மணி, மற்றொருவர் நடுத்திட்டு கூத்தரசன்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட நடுத்திட்டு கிராமத்தில் 4 ஜூன் 1926 அன்று நடேசன் பிறந்தார். இவர்களின் முன்னோர்கள் எட்டுத் தலைமுறைக்கு முன்பு உடையார்பாளையம் ஜமீனுக்குச் சொந்தமான நிலத்தைச் சீர்செய்து செப்பனிட நடுத்திட்டுக் கிராமத்திற்கு அழைத்து வரப் பட்டனர். கூத்தரசன் தனது பள்ளிப் படிப்பை அருகில் இருந்த மணல்மேடு அரசுப் பள்ளியில் பயின்றார். 1952இல் காந்தியவாதியான அருணாசலம் பிள்ளை நடத்திய திருச்சிற்றம்பலம் காந்திஜி வித்யாலயா ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றார்.

இளமைக் காலத்திலேயே துடிப்புடன் செயல்பட்ட காரணத்தினால் பிரபலமானவர். மணல்மேடு கடைத் தெருவில் அலமேலு மண்டபம் என்னும் இடத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு மூங்கில் மூலம் தண்ணீர் கொடுத்து வந்தனர். இதனைக் கண்டு வெகுண்டெழுந்த நடேசன், கிராம மக்களுடன் சேர்ந்து தண்ணீர்ப் பானைகளை உடைத்துப் போராட்டம் நடத்தி வெற்றிகண்டார்.

பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளைப் பேசிவந்த ஃபெடரேஷனின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்தார். தொடர்ச் சமூகச் செயல்பாட்டின் மூலமாகக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக உயர்ந்தார். 1954ஆம் ஆண்டு தொடங்கி 1995 முடிய 41 ஆண்டுகள் ஆசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றினார். பணியின்போது துறைக்குள் நடந்த சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் களம் கண்டுள்ளார். கவிதை, கட்டுரை, சீர்திருத்த நாடகம், சிறுகதை போன்றவற்றைக் கூத்தரசன் என்ற புனைபெயரில் பல இதழ்களில் எழுதியுள்ளார். பெரும்பாலும் நடுத்திட்டுக் கூத்தரசன் என்பதே எல்லோருக்கும் பரிச்சயமான பெயராகப் பிற்காலத்தில் அமைந்தது. ‘எண்ணிப்பார்’ என்கிற இவரது சமூகச் சீர்திருத்த நாடகம் மக்களிடையே பெரிய வரவேற்பையும் தாக்கத்தையும் பெற்றுள்ளதைக் கிராமவாசிகளின் உரையாடல்கள் வழியாக அறிய முடிகிறது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!