தென்தமிழகப் பகுதியில் 1990களுக்கு முன்பு செயல்பட்ட தலைவர்கள், அவர்களது அமைப்புகள், அவர்கள் முன்னின்று நடத்திய போராட்டங்கள், அத்தலைவர்களின் சமூகச் செயல்பாடுகள் பற்றிய கதைகளைக் கேட்கும், தரவுகளைத் தேடும் வேட்கையில் இருந்தோம். அதனால் கிராம அளவில் அல்லது வட்டார அளவில் செயல்பட்ட ஆளுமைகளைச் சந்திப்பது, அவர்களோடு உரையாடுவது, முடிந்தால் அவர்களுடைய அனுபவங்களையும் செயல்பாடுகளையும் ஆவணப்படுத்துவது என்று திட்டமிட்டிருந்தோம். அப்படிக் கேள்விப்பட்டுச் சந்தித்த மாபெரும் ஆளுமைதான் எஸ்.பி.ராஜ். அவருடைய தனிச்சிறப்பே சிவகாசி நகரின் மையப் பகுதியில் தனிநபராக பாபாசாகேப் அம்பேத்கருக்கு முழு உருவச் சிலையுடன் மணிமண்டபம் கட்டியெழுப்பியதுதான். இன்றைக்கும் அது பயன்பாட்டில் உள்ளதனைக் கேள்விப்பட்டுப் பார்க்கச் சென்றோம். சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபம். இரண்டு அடுக்குகள் கொண்ட வணிக வளாகமாகவும், அதன் உச்சியில் அம்பேத்கரின் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமாகவும் அது விளங்குகிறது. இம்மண்டபத்தின் சுற்றுச் சுவரில் பௌத்த தம்மச் சக்கரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் “உலகப் பேரறிஞர் பாபாசாகேப் Dr.அம்பேத்கார் மணிமண்டபம். இம்மணிமண்டப பணி தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் பேரியக்கச் செயலரும் இந்திய குடியரசுக் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவருமான திருமிகு S.P.ராஜ் அவர்களின் தனி முயற்சியால் தன் குடும்ப நிதிநிலையிலிருந்து நண்பர்களின் ஒத்துழைப்புடன் கடும் முயற்சியில் தனிமனித நிலைப்பாட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. செப்டா நிதி உதவியும் பெற்றது. இம்மணிமண்டபத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் Dr. கலைஞர் அவர்கள் 17.11.89ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்” என்ற செய்தியும், கல்வெட்டு உட்பகுதியின் இரு பக்கங்களில் தம்மச் சக்கரமும் பொறிக்கப்பட்டுள்ளன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then