அதிகாலை நாலு மணிக்கு எழுந்த மாடத்தி, கழுதையை வேறு இடம் மாற்றிக் கட்டினாள். கழுதை விட்டைகளுடன் அதன் கழிவுகளைப் பெருக்கிச் சுத்தம் செய்தாள். முகம் கழுவி, வாய் கொப்பளித்த கையோடு, வெளிங்காட்டுக்குப் போய்வந்து கால்கழுவினாள். வீட்டுக்குள் நுழைந்தவுடன் கஞ்சிப்பானைக்குள் கைவிட்டுத் துழாவி பிள்ளைகளுக்கான காலை கஞ்சி இருப்பதை அறிந்தவள், பானையைக் கலக்கிவிட்டு தூக்குச்சட்டி நிமுர நீத்தண்ணி ஊற்றிக்கொண்டாள். அவர்களுடைய கழுதை வெளுப்பும் கருப்பும் கலந்த மயில் கலர் நிறம், படு சுறுசுறுப்பு, எவ்வளவு கனமான பொதியவும் சுமந்து பொயிரும். வெளுப்புக்கான துணிகளை நான்கைந்து மூட்டைகளாக்கிக் கழுதையின் முதுகில் பாரம் ஏற்றி வண்ணாந்துறைக்குத் தயாரானார்கள் மாடத்தியும் அவளது புருசன் மாடனும்.
ஊருக்கு வெளியே புறம்போக்கு இடத்தில் பனைவோலையில் வேயப்பட்ட குடிசை வீடு ஒன்றைக் கிராமத்தாரே இவர்களுக்கு அமைத்துக் கொடுத்திருந்தார்கள். அதனால் கிராமத்தாருக்குப் பயந்து பயந்து நடக்க வேண்டியதிருந்தது. ஏதும் சொன்னால் ஊரைவிட்டு விரட்டப்படுவோமோ என்ற நிரந்தர அச்சமிருந்தது. ஊர்க்காரங்களும் “ஊரவுட்டு முடிக்கீருவோம்”னு அதட்டியே வைத்திருந்தார்கள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then