சித்தலிங்கையா வழியே சில குறிப்புகள்…
அண்மையில் காலமான கன்னட தலித் எழுத்தாளர் சித்தலிங்கையா பற்றிய அஞ்சலிக் கூட்டமொன்றில் பேசுவதற்காகத் தமிழில் வெளியாகியுள்ள அவர் நூல்களை ஒருசேர வாசிக்க வேண்டியிருந்தது. அவர் படைப்புகள் தமிழில் ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் அந்நூல்களின் /அவரின் தமிழ்த்தொடர்பைப் பேச முடியும் என்று கருதி வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.
அவர் எழுத்துகள் தமிழில் வெளியாகியிருந்தது மட்டுமல்லாமல் அவருடைய இளமைக்காலம் முழுக்கப் பெங்களூர் ஸ்ரீராமபுரத்தில் கழிந்திருந்தது என்பதும் என்னை உந்தியிருந்தது. இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ள அவரின் சுயசரிதை நூல்களிலும் ஸ்ரீராமபுரம் வாழ்க்கையே அதிகம் பதிவாகியிருக்கிறது. ஒருமுறை அவரை நேரில் சந்தித்த போது கூட ஸ்ரீராமபுரம் வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். ஸ்ரீராமபுரம் பெங்களூரில் தமிழர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் ஒன்று என்பதும் இன்றைக்கும் என்னுடைய நிறைய உறவினர்கள் அங்கு வாழ்வதாலும் அத்தகைய ஆர்வம் எனக்கு உண்டாகியிருந்தது. பள்ளிக்கூட கோடை விடுமுறை நாட்களில் நானும் அங்கு சென்றிருக்கிறேன். இப்பின்னணியில் சித்தலிங்கையா உருவாக்கத்தில் இருந்திருக்கக்கூடிய தமிழ் தொடர்பை இனங்காண முடியும் என்பது என் யோசனையாக இருந்தது. ஆனால், இந்தத் தேடல் சித்தலிங்கய்யாவையும் தாண்டி வேறொரு வரலாற்றை அறிவதில் கொண்டு நிறுத்தியது என்பதுதான் இதில் நடந்த சுவாரஸ்யம்.
அதாவது தமிழ் தலித் இலக்கிய முயற்சிகளுக்கு முன்னோடியாக மராத்தி மற்றும் கன்னட தலித் இலக்கியங்கள் இருந்தன. தமிழில் 1990களில் கிளைத்த தலித் இலக்கிய வகைமைக்கு முன்பே 1970களில் கன்னடத்தில் தலித் இலக்கிய வகைமை உருவாகிவிட்டது. அந்த வகையில் தமிழுக்குக் கன்னடம் முன்னோடி. அதேவேளையில் கன்னடத்தில் தலித் இலக்கியம் பற்றிய பேச்சு உருவான போது தமிழ் தொடர்புகளும் இருந்திருக்கின்றன என்பதுதான் நாம் அறியாத செய்தியாக இருக்கிறது. சித்தலிங்கய்யாவுடனான தமிழ்த்தொடர்பைத் தேடியபோது இந்த இணைப்பை அறிய முடிந்தது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then