கடந்த 31 அக்டோபர் 2024 அன்று நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பிலான ‘அமரன்’ திரைப்படத்தைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது. முதலமைச்சர் ஸ்டாலினுக்காகச் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்து ஸ்டாலின் கண்கலங்கியது தொடர்பான பதிவுகளும் சமூக ஊடகங்களில் பிரபலமாயின. படம் வெளியான பிறகு ரஜினிகாந்த், சூர்யா, மாரி செல்வராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் சீமான், அண்ணாமலை, ஹெச்.ராஜா, செல்வப்பெருந்தகை முதலான அரசியல் தலைவர்களும் படத்தைப் பாராட்டியுள்ளனர். திரைப்பிரபலங்கள் ஒரு திரைப்படத்தைப் பாராட்டுவது தொழில்ரீதியான வழமை எனலாம். ஆனால், பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த பல அரசியல் பிரமுகர்களும் திரைப்படத்தைப் பாராட்டுவது குறிப்பிடத்தக்கது. வெகுமக்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தேசியம் – இராணுவம் – காதல் ஆகிய மூன்றினது குவியப் புள்ளியில் பல பிரமுகர்களும் வெகுமக்களும் வித்தியாசங்களின்றி ஒன்றிணைகின்றனர்.
‘இந்திய சமூக ஜனநாயகக் கட்சி’யினர் (எஸ்.டி.பி.ஐ), திருமுருகன் காந்தி, இயக்குநர் கோபி நயினார் முதலானோர் திரைப்படத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சில முஸ்லிம் அமைப்புகள் திரையரங்குகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலையடுத்து, சென்னையில் ‘அமரன்’ திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then