தலித்தியத் திரையைத் தேடுதல்
“பிற இந்திய மொழிகளைவிடத் தமிழில் தலித் இலக்கியங்கள், கலைகள், கோட்பாட்டு உரையாடல்கள் அளவீட்டு அடிப்படையில் அதிகம். அது சற்று வியப்பாகவே இருக்கிறது. மராத்தியில் தலித் அரசியல் நிகழ்வுகள் அதிகம் இருந்தாலும் தமிழில் உள்ளது போன்ற பன்மையான போக்குகள் குறைவு. இந்திய மொழிகளில் தலித் இலக்கியங்களும் கலைகளும் இரக்கத்திற்குரிய ஓரநிலையில்தான் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழில் அப்படியில்லை, தலித் அரசியல் உரக்க ஒலிக்கிறது. தலித் ஆய்வுகளும் அதிகம் உள்ளன, தலித் அறிஞர்கள் உலகச் சிந்தனைகளை உள்வாங்கியிருக்கிறீர்கள். பகுத்தறிவு, சுயமரியாதை அரசியலில் ஒரு நூற்றாண்டு வரலாறு தமிழுக்கு உள்ளது, அதற்கு அடித்தளமிட்ட தலித் தலைவர்களும் தமிழில் இருந்தார்கள். நவீனத்துவம், பின்நவீனத்துவம், பெண்ணியம், பின்னைநவீனத்துவம், எதிர்கலாச்சாரம், மறுகட்டமைப்பு (டிகன்ஷ்டரக்ஷன்) எல்லாவற்றையும் தலித் அழகியலோடு இணைத்து வைத்திருக்கிறீர்கள். எல்லாம் இருந்தும் தலித் சினிமா மட்டும் ஏன் தமிழில் இல்லை? அதனைவிடக் கொடுமையாகத் தலித் பிரதிநிதித்துவம் மிகச் சீரழிந்த, அவமானகரமான நிலையில் உள்ளது. சாதிப் பெருமை, சாதிவெறி, தலித் இழிவு, அம்பேத்கரியத்தைச் சிறுமைப்படுத்துவது எல்லாம் தமிழில் அதிகம் உள்ளன. அதனை ஏன் உங்களால் (அதாவது தலித் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், அரசியல் களத்தில் உள்ளவர்கள்) தடுக்க முடியவில்லை? தலித் சினிமாவே தமிழில் உருவாக முடியாதா?”
இவற்றை என் குரலில் படிக்காதீர்கள். இவை ஆங்கிலத்தில் எழுதும் பிறமொழி ஆய்வாளர்கள் சிலர் என்னிடம் அவ்வப்போது முன்வைத்த கேள்விகள். இவற்றிற்கு நான் அளித்த பதில் எளிமையானது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then