பதில் வேண்டாக் கேள்விகள்
உன்னை
எதுவரை என்னால் காதலிக்க முடியும்?
உலகின் எல்லாக் கடிகாரங்களும்
ஒரே நேரத்தைக் காட்டும் வரையிலா?
உன்னை
என்றுவரை என்னால் காதலிக்க முடியும்?
பூமியில் எல்லா இடங்களிலும்
விடியலும் அந்தியும் ஒரேபோலக் காணும் வரையிலா?
உன்னை
எந்தத் தருணம்வரை என்னால் காதலிக்க முடியும்?
கிளையுதிர்ந்த பூ
சுழன்று இறங்கி மண்ணில் விழும் முன்பே
அந்தரத்தில் வாசனையாக மிஞ்சும்வரையிலா?
உன்னை
எந்த நொடிவரை என்னால் காதலிக்க முடியும்?
என்னுடனான உன் அன்பு
எல்லாவற்றினும் மீதான உன் காருண்யத்தின்
ஆகப் பெரிய துளி என்பதை மறவாத வரையிலா?
– சுகுமாரன்.
நிதானத்துடனும் கவனத்துடனும் சீவப்பட்டப் பென்சில், நாட்கணக்காக மனதிற்குள் ஊறப்போடப்பட்ட வரியைத் தயக்கத்துடன் மேலெடுத்து நீவிவிட்டுப் பிசுறுகள் களைந்த பின் திருப்திக்கும் அதிருப்திக்குமான ஊசலாட்டம், பொறுமை எல்லை மீறிய பிறகு மலரும் சுபவேளையில் மூன்று வரியை எழுதி, அதையும் அழித்த பிறகு வெற்றுத்தாளில் வந்தமரவிருக்கிற வரிக்காக மனதைக் குடைந்தபடி நடைபோடுதல். சுகுமாரன் என்றதும் மனதிற்குள் உதிக்கும் சித்திரம் கிட்டத்தட்ட இதுதான். சில சமயங்களில் ஒரே அமர்வில் கூட மெச்சத்தக்கக் கவிதைகளை அவர் எழுதியிருக்கக் கூடும். அதுவும் இயல்பான ஒன்றுதான். மொத்தக் கவிதைகளின் தொகுப்புக்கு (பூமியை வாசிக்கும் சிறுமி) எழுதிய முன்னுரையில் நிக்கனார் பாரா(சிலி)வின் இக்கவிதையை மேற்கோள் காட்டியிருக்கும் காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது:
‘கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது
சந்தேகமின்றி, இந்த நிபந்தனையுடன்.
வெற்றுத்தாளில் நீ முன்னேற வேண்டும்.’
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then