1
உளவியலைப் பற்றி அதிகமாகப் பேசியது பௌத்தம்தான். மனித உடலும் மனித மனமும் சேர்ந்துதான் இந்த வாழ்க்கை. மனதின் ஆளுமைதான் இந்த உலகத்தை வழிநடத்துகிறது என்பது புத்தரின் கோட்பாடு. உலகம் தோன்றியது, வளர்ந்தது பற்றி எந்தவிதமான அக்கறையுமின்றி இப்போது இருக்கிற இந்த இருப்புக்கான பதில்களையே தந்தார். உலகம் குறித்த கேள்விகளுக்கெல்லாம் அவர் அமைதியாகவே இருந்தார். ஏனென்றால், இந்த உலகில் நடக்கும் நன்மை, தீமை அனைத்திற்கும் மனமே அடிப்படை என்று அவர் நம்பினார். அபிதம்ம பிடகத்தில் மனதின் ஆளுமை மிக ஆழமாகப் பேசப்பட்டிருக்கிறது. மனித மனத்தைத் தூய்மையாக்கலும் அதை ஆளுவதும் அதற்கு அடிமையாகாமல் இருப்பதும்தான் புத்தரின் கோட்பாடாக இருந்தது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then