11
பௌத்தத்தின் பெருஞ்செல்வம் என்பது அதன் சடங்குகளில் எப்போதும் இல்லை. மக்களை மயக்கும் அறிவுக்கு எதிரான மாய மந்திரங்களிலுமில்லை. அதன் வழிபாட்டுத் தளங்களில் இருக்கும் வேற்றுமைகளில் அல்லது ஒற்றுமைகளில் இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. அப்படியானால் பௌத்தம் எங்கே நிலைபெறுகிறது என்றால், அது காட்டும் கட்டற்ற அன்பினால்.
பௌத்தம் காட்டும் அன்பு என்பது மற்ற சமயங்கள் காட்டும் அன்பைப் போன்றது அல்ல. அன்புதான் எல்லாம் என்று தியானித்துக்கொண்டே அன்பில்லாமல் உலகில் போர்களைத் தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளைக் கொல்வார்கள். அன்பே தெய்வம் என்று சொல்லிப் பிற மதங்களைச் சார்ந்தவர்களைத் துன்புறுத்துவார்கள். அந்தச் சமயங்கள் சொல்கின்ற அன்பு என்பது தத்துவ விசாரங்களாகத்தான் இருக்கும். ஆனால், நடைமுறையில் உலக வரலாறு நமக்குப் போதிப்பது, அப்படி இருக்கலாகாது என்பதைத்தான்.
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழுகிறது. அப்படியானால் இலங்கையில் பௌத்த மதம் சார்ந்த ஓர் அரசுதானே தமிழர்கள்மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துக் கொன்று குவித்தது? உண்மைதான். பேரினவாதம் மதத்தைத் தரித்துக்கொண்ட துன்பியல் அது. உண்மையான பௌத்தம் அதுவன்று. அது அரச பயங்கரவாதம். ஆனால், ஒரே மதத்திற்குள்ளே இருப்பதாகக் கருதப்படும் மக்களைத் தள்ளிவைத்து மனரீதியான துயருக்குள்ளாக்கும் கொடுஞ்செயல்கள்போல் அது இல்லை. மேலும், சிங்கள அரச பயங்கரவாதத்திற்குத் துணையாகப் பௌத்தத்தில் எந்தக் கருதுகோளும் இல்லை. ஆனால், தீண்டாமைக்கும் ஜாதிக்கும் மதத்தின் தீவிர அங்கீகாரம் உண்டு.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then