12
யார் பிராமணர்?
புத்தருடைய நீண்ட பேருரைகள் அடங்கிய தொகுப்பு தீகநிகாயம். புத்தரின் போதனைகள் எல்லாம் திரிபிடகம் என்னும் தொகுப்பாக நமக்குக் கிடைக்கிறது. திரி என்றால் மூன்று. பிடகம் என்றால் பூக்கூடை. மூன்று பூக்கூடைகளாக மூன்று பிடகங்களும் மணம் வீசுகின்றன என்று இதனை நாம் பார்க்கலாம். சுத்தபிடகம், அபிதம்ம பிடகம், விநய பிடகம். இவற்றுள் சுத்த பிடகத்தில் இடம்பெற்ற நூல் தீகநிகாயம். அதுவும் மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. சீலகந்தக வக்கம், மகா வக்கம், பாடிய வக்கம் என்பது. இதில் சீலகந்தக வக்கத்தில் உள்ள சோணதண்ட சுத்தத்தைப் பார்ப்போம்.
ஒருமுறை புத்தர் அங்கதேசத்தில் சம்பா என்னுமிடத்திற்கு ஐநூறு பிக்குகளுடன் வந்தார். சம்பா நகரத்தில் சோனதண்டன் என்னும் பிராமணன் வாழ்கிறான். மகத மன்னன் பிம்பிசாரனால் தானமாகக் கொடுக்கப்பட்ட ஊர்தான் சம்பா. வளம் நிறைந்த ஊர் அது. மிகுந்த செல்வந்தனாக சகல அதிகாரமும் படைத்தவனாக சோனதண்டன் அங்கு இருந்தான்.
புத்தர் தங்கியிருந்த இடத்திற்குச் சம்பா நகரில் இருக்கும் பிராமணர்கள் அவரைக் காண்பதற்காகக் கூட்டமாகச் செல்கின்றனர். அதைக் கண்ட சோனதண்டன் அவர்களைக் காத்திருக்குமாறு கூறி, தானும் புத்தரைக் காண வருவதாகக் கூறுகிறான்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then