2
புத்தரின் வாழ்க்கை மிகவும் எளிமையானது. அவரின் பயணங்கள் வேண்டுமானால் கடுமையானவையாக இருக்கலாம். ஞானமடைந்து அவர் மக்களுக்குத் தன் கருத்துகளைப் பரப்ப எல்லா இடங்களுக்கும் அலைந்தார்; உரையாடல்களை முன்வைத்தார். எண்பத்து நான்காயிரம் உரையாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவர் எல்லோரிடமும் பேசினார். தன்னிடம் பேசுவதற்கு அவர் யாரிடமும் எந்தத் தகுதியையும் எதிர்பார்க்கவில்லை.
இவ்வளவு பயணங்கள், இவ்வளவு உரையாடல்கள் ஏன்? ஒரே நோக்கம்தான். மானுடர்களின் துன்பங்களை இல்லாமலாக்குவது; துன்பங்களிலிருந்து அவர்களை விடுவித்து வாழவைப்பதுதான். நாம் இந்த அத்தியாயத்தில் துன்பங்களைக் குறித்துப் பேசவில்லை. ஆனால், துயரங்கள் நீக்கப்படுவதற்காக பௌத்தம் காட்டும் ஒரு வழியைப் பேசிப் பார்க்கலாம். மைத்ரி என்னுமொரு சொல் இருக்கிறது; பிறரை மகிழ்ச்சியாக்குவதற்காக நிபந்தனையற்ற பக்குவத்தை நம் மனத்திற்குத் தருவது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then