பேரொளிப் பயணம் : காரணமும் விளைவும்

யாழன் ஆதி

4

ரு பூக்கும் தாவரத்தின் வாழ்வில் ஒளிச்சேர்க்கை மிகவும் முக்கியமானது. ஒளிச்சேர்க்கை என்பது காரணம். அதனால் ஏற்படும் விளைவு என்பது ஸ்டார்ச் எனும் உணவு. ஒளிச்சேர்க்கை நடைபெறும் சூழல் இன்றியமையாதது. காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு, நீர், தாவரத்தின் பச்சையம், சூரிய ஒளி ஆகியவற்றின் பங்களிப்பில் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்கின்றன. இதன் விளைவாகத்தான் உணவு தயாரிக்கப்படுகிறது. தங்களுக்கான உணவைத் தாவரங்கள் தாமே தயாரித்துக்கொள்வதால் தற்சார்பு ஊட்ட உயிரிகள் என்றும், பிற உயிர்கள் அனைத்தும் உணவுக்காக மற்றவற்றைச் சார்ந்திருப்பதால் பிறச்சார்பு ஊட்ட உயிரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இதுவோர் அறிவியல் நிகழ்வு. இந்நிகழ்வை மிகச்சரியாகப் புரிந்துகொள்வதன்மூலம் பௌத்தத்தின் காரணமும் விளைவும் எனும் கோட்பாட்டை மிக எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். உலகத்தில் நடக்கும் அனைத்துச் செயல்களுக்கும் காரணங்களும் காரியங்களும் விளைவுகளும்தாம் அடிப்படை.

மனித இருப்பும் பிற உயிர்களின் இருப்பும் காரணங்களையும் விளைவுகளையும் சார்ந்துள்ளது. ஒருவர் செல்வந்தராக இருப்பதற்கும், ஏழையாக இருப்பதற்கும், நோயாளியாக இருப்பதற்கும், ஆரோக்கியமானவராக இருப்பதற்கும், வசதியான நகரத்தில் வாழ்வதற்கும், ஏதுமற்ற பாலை நிலத்தில் வாழ்வதற்கும் எது காரணம்?

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger