7
அறிவியலும் நிலவியலும் நமக்கு எட்டுத் திசைகளைக் காட்டுகின்றன. அறிவியலின் முழு வளர்ச்சியும் அதன் தீவிரமும் தொடங்காததற்கு முன்னமே அறிவியல் சிந்தனைகள் பௌத்தத்தில் விளைந்திருந்தன என்பது உலகமே வியக்கின்ற செய்தி. தெற்காசியாவின் ஏதோ ஓரிடத்திலிருந்து தோன்றிய ஒளி, உலகம் முழுக்கத் தன் அறிவுக் கதிர்களைப் பரப்பி மானுடத்தை உய்விப்பதற்கான வழிகளைக் காட்டியது என்றால் அது பேரதிசயமாகத்தானே இருக்க வேண்டும். அந்தப் பேரதிசயம் எந்தக் கடவுளாலும் நிகழ்த்தப்படவில்லை. புத்தர் என்ற மானுடர் அரிதின் முயன்று பெற்ற அறிவால் நிகழ்ந்தது. அதனால் அவரை ததாகதர் என்று நாம் அழைக்கிறோம்.
பௌத்தம் எப்போதும் மனித வாழ்வுக்கானது. அது மனிதர்களைப் பற்றி மிக ஆழமாகச் சிந்திக்கிறது. ஆனால், பலர் பௌத்தத்தை மிக கடினமானதாகச் சித்திரித்து அதை வெகுமக்கள் மார்க்கமாக மாற்றாமல் போனார்கள். உலகத்தில் உள்ள எல்லோரும் துறவிகளாக முடியாது. அப்படியானால் சாதாரண இல்லறத்தார் எப்படிப் பௌத்தத்தைப் பின்பற்ற முடியும்? இல்லறத்தில் ஈடுபடுபவர்களும் பௌத்தர்களாய் இருக்கலாம் என்றால் சங்கத்தை ஏன் புத்தர் கட்டமைத்தார் என்னும் கேள்விகளும் எழுகின்றன. வெறும் தன்னுடைய வளர்ச்சியை மட்டும் கருதாமல் பிறருக்குச் சேவைகள் செய்ய நினைப்பவர்கள் சங்கத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். முழுநேரமாகத் துறவியாகி பிறருக்கு வாழ்வதையே தன் வாழ்வாக யார் கருதுகிறார்களோ அவர்களுக்குத்தான் சங்கம். சங்கத்தில் இருக்கும் பிக்குவுக்கு எந்தக் கவலையும் இல்லை; குடும்ப பாரம் இல்லை; அவர் எப்போதும் தனக்காகச் சிந்திக்காமல் பிறருக்காக வாழ்பவர்; தன்னுடைய வயிற்றுக்கான உணவைக் கூட முழுமையாக உண்ணாதவர், அதற்காக அவர் தானம் பெறுகிறார்; அவர் எதையும் தனக்காக வைத்துக்கொள்ளாதவர்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then