எதிர்க்கிறோம், அதனாலேயே இயங்குகிறோம்

இலஞ்சி அ.கண்ணன்

“உரிமைகள் சட்டத்தால் பாதுகாக்கப்படுவதில்லை; அவை சமூகத்தின் அறநெறிகளால் காப்பாற்றப்படுகின்றன. சட்டம் நிறைவேற்றும் உரிமைகளை ஏற்று அங்கீகரிக்கும் வகையில் சமூகத்தின் மனசாட்சி இருக்குமானால், உரிமைகள் உண்மையிலேயே உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். ஆனால், அடிப்படை உரிமைகளைச் சமூகம் எதிர்க்கும் என்றால் சட்டமோ, நாடாளுமன்றமோ, நீதிமன்றமோ எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது”

– புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் (டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுதி : 1, ப.304)

ளும் அரசதிகாரம் எவரிடம் இருந்தாலும் அதனால் எந்த மாற்றமும், குறிப்பாக தலித் மக்கள் வாழ்வில், இங்கு ஏற்படப்போவதில்லை என்பதுதான் தொடர்ந்து நிகழும் சாதிய வன்முறைகள் உணர்த்தும் பாடம். இதில் திராவிட அரசுகளும் விதிவிலக்கல்ல. மேலும், முற்போக்கென்னும் போர்வையில் தோழமையோடு தோளில் கைப் போட்டுக்கொண்டே புறமுதுகில் குத்துவதும் அவர்களுக்குப் புதிதல்ல. எவ்வளவுதான் குத்தினாலும் நாமும் மாறப் போவதில்லை. இந்நிலை எப்போது மாறுகிறதோ அப்போதுதான் நமக்கான அரசியல் அதிகாரம் சாத்தியமாகும். அதுவரைக்கும் நம் மீதான சாதிய வன்முறைகள் நீடித்துக்கொண்டே இருக்கும்; நாம் அந்தந்தத் தருணத்தில் மட்டுமே முன்னெடுக்கும் தன்னெழுச்சியான போராட்டமும் அரசியல்வாதிகளுடைய அழுத்தத்தாலும் நம் சமூகத் தலைவர்களின் தலையீட்டாலும் நீர்த்துப்போகவே செய்யும். பொதுவாக, தமிழ்ச் சூழலில் சாதியப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பதற்குச் சாதிச் சங்கங்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, ஆறுமுகமங்கலம், தெற்கு மாடவீதியைச் சேர்ந்த சந்திரசேகர் – தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மூத்த மகன் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷூம் (27), பள்ளிப் பருவத்திலிருந்தே அவரோடு படித்த, பாளையங்கோட்டை கே.டி.சி நகரைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர்களான சரவணன் – கிருஷ்ணகுமாரியின் மகள் சுபாஷினியும் காதலித்துவந்துள்ளனர். இதையடுத்து கடந்த 27.07.2025 அன்று சுபாஷினியின் உடன்பிறந்த தம்பியால் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார் கவின் செல்வகணேஷ். காரணம், சுபாஷினி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பான மறவர் சாதியைச் சேர்ந்தவர். கவின் செல்வகணேஷ் பட்டியல் வகுப்பிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுதான். இவர்கள் இருவரும் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்துவந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger