பத்தொன்பதாம் நூற்றாண்டில் பழம் இலக்கிய ஏடுகள் அச்சாகத் தொடங்கிய போது நீதி நூல்கள், கதை நூல்கள், புராணங்கள்தான் பதிப்பிக்கப்பட்டன. சங்கத் தொகை நூல்கள் உடனே அச்சில் ஏறவில்லை. தொடக்ககாலப் பதிப்பு முயற்சிகளில் ஈடுபட்ட பலருக்குச் சங்கத்தொகை நூல்களின் பெயர்கள் கூட தெரிந்திருக்கவில்லை. உள்ளூர் கல்வி முறையிலும் அந்நூல்கள் பயிற்றுவிக்கப்பட்டதாக தெரியவில்லை. மடங்கள் போன்றவற்றிலும் அவை பராமரிக்கப்பட்டதாக தெரியவில்லை. மெல்லவே அந்த ஏடுகள் அச்சினைச் சந்தித்தன.இவ்வாறு தாமதமாக வந்த அந்நூல்களே இருபதாம் நூற்றாண்டு தமிழ் மறுமலர்ச்சி சொல்லாடலைக் கட்டமைப்பதில் முக்கிய ஆதாரங்களாக மாறின. தமிழிற்குச் செவ்வியல் தகுதி அந்நூல்களால்தான் கிடைத்தன. அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலக்கியச் சொல்லாடலில் பின்னாலிருந்தவை இருபதாம் நூற்றாண்டில் முதன்மையானதாக மாறிநின்றன.
இவ்வாறு கூறுவதன் பொருள் அந்த ஏடுகள் இல்லாமலே இருந்தன என்பதல்ல. மாறாக அவை பல்வேறு காரணங்களால் நம்முடைய பயில்முறையில் கொணரப்படாதிருந்தது என்பதே பொருள். அவற்றைப் படித்துப் பாதுகாத்து வந்த ஏதோவொரு மரபு, ஏதோவொரு குழாம் சிறுபான்மையான அளவில் இருந்திருக்கிறது. அவ்வாறு இருந்த ஏடுகளே மெல்ல அச்சிற்கு வந்து, பின்னால் போக்கைத் தீர்மானிப்பதாகமாறியது. எனவே முற்றிலும் இல்லாதிருந்ததைத் திடீரென யாரும் கண்டுபிடித்து விடவில்லை. ஏதோவொரு குழுவினரால், ஏதோவொரு விதத்தில் பராமரித்து வந்ததாலேயே அவை அச்சு வரை வந்தன. அந்த வகையில் தொடர்ச்சியைத் தக்க வைத்து வந்த சிறு மரபினர் முக்கியமானவர்கள் ஆகிறார்கள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then