அந்த வரிசை நகரவில்லை. அது நகருமா என்றும் தெரியவில்லை. ஆனாலும் வரிசையில் நின்ற சிங்காரம் உற்சாகத்துடன் இருந்தார். மனு கொடுத்ததும், மாவட்ட ஆட்சித் தலைவர் அதிகாரிகளை அழைத்துக் கடுமையாகத் திட்டுவார். எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு, அரசு வாகனத்திலேயே தன்னை அழைத்துக்கொண்டு போய், இடத்தைப் பார்வையிட்டு உத்தரவுகளைப் பிறப்பிப்பார். நாளைக்கே கொத்தனார்களை அழைத்து அளவெடுக்கச் சொல்லிவிடலாம். வனமயிலிடம் தீர்க்கமாக எல்லாவற்றையும் பேசிவிட வேண்டும். நினைக்க நினைக்க சிங்காரத்தின் மனம் குதூகலத்தில் விம்மியது. அவர் அங்கும் இங்கும் கண்களைத் திருப்பி, அந்த இடத்தை அப்போதுதான் பார்ப்பதைப் போலப் பார்த்துக்கொண்டார்.
வரிசை வலியில் உளைந்து தவித்தது. காத்துக் கிடந்தவர்களின் முறைப்பாடுகளும் அரற்றல்களும் பெருகின. துயரில் தோய்ந்த சொற்கள் உதிர்ந்தன. ஏக்கமும் சினமும் வெளிப்பட்டன. வரிசையில் முதியவர்களே அதிகமாகத் தெரிந்தனர். அவர்களுக்கு அடுத்து பெண்களையும் மாற்றுத் திறனாளிகளையும் பார்க்க முடிந்தது. அந்தக் காலை பளபளவென விடிந்திருந்தாலும் நிற்கிற முகங்களில் இருள் படிந்திருந்தது. கூண்டில் அடைபட்ட பறவைகளாய் இமைகள் செட்டையடித்தன.
‘அங்கிருக்கிற மனிதர்களெல்லாம் ஏன் அப்படி இருக்கிறார்கள்?’ சிங்காரம் நினைத்தார். ‘வஞ்சிப்பதற்கும் ஏமாற்றுவதற்கும் ஏற்றவர்களா இவர்கள்? நிராகரிப்புக்கும் புறக்கணிப்புக்கும் உரியவர்களா இவர்கள்? இந்த எளியவர்களை உலகம் ஏன் இப்படியெல்லாம் கருதுகிறது? இவர்கள் உலகின் தொங்கு சதையா? இவர்கள் அவ்வளவு கனமா?’ அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then