“இந்தியச் சமூகத்தில் ஒரு கணிசமான பகுதி சாதிக்கு எதிராக இருக்கிறது என்பது ஒரு மாயை. உண்மையில் மதவாதம், பாலின பேதம், பொதுவான உழைப்பாளிகள், விவசாயிகள் மீதான சுரண்டல் போன்ற பல விஷயங்களில் முற்போக்கான கருத்துகள் கொண்ட மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். எனினும், இந்தத் தீமைகளுக்கெல்லாம் வேராக இருக்கக்கூடிய சாதி என்பது வரும்போது, அவர்கள் அதை தலித்துகள் பார்த்துக்கொள்ளட்டும் என்று வசதியாக இருந்து விடுகிறார்கள்.”
– ஆனந்த் டெல்டும்டே (சாதியின் குடியரசு)
தலித் மக்கள் பன்னெடுங்காலமாகத் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் சமத்துவமின்மைகளுக்கும் எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். அவர்களின் பல நூற்றாண்டுக் காலப் போராட்டமென்பது, பிராமணிய சித்தாந்தத்தின் இருப்பைத் தலைகீழாக்குகிற சமரசமற்றப் போராட்டம். ஆனால், அதனைத் தலித்துகளின் இருத்தலுக்கான போராட்டம் எனச் சுருக்கிப் பார்க்கும் குறுகிய மனநிலைப் போக்கே எங்கும் நிலவுகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then