ஓட்டுநர் உரிமமே இல்லாத 17 வயது இளைஞன், மது அருந்திவிட்டு நள்ளிரவு மூன்று மணியளவில் சாலையில் சென்ற இரண்டு நபர்கள் மீது காரில் மோதி கொலை செய்திருக்கிறான். ஒன்றும் தெரியாத அந்தக் குழந்தையைத்தான் “சரி, சரி… இனிமேல் இப்படில்லாம் பண்ணக்கூடாது சரியா!” என்ற சாதாரண கண்டிப்புடன், 300 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுதச் சொல்லியிருக்கிறது புனே நீதிமன்றம்.
ஏனென்றால், அச்சிறுவன் ஓட்டியது சில லட்சங்கள் விலை கொண்ட கார் அல்ல. ஒன்றரைக் கோடி மதிப்புள்ள போர்ஷ் (Porsche) ரக கார். இதிலிருந்தே அதை ஓட்டிய இளைஞன், அவனது பெற்றோர்களின் நிதிநிலை, அரசியல் பின்புலம் என்னவென்று உங்களுக்குப் புரிந்திருக்கும். இதுவே மாருதி ஸ்விஃப்ட் ரக காராக இருந்திருந்தால் இந்தக் கனிவும் சலுகைகளும் கிடைத்திருக்குமா? நிச்சயம் கிடைக்காது. நாம் ஒழுங்காகவே சென்றாலும் நம் மீது மோதியது பணக்கார வண்டியாக இருந்தால், இதே மரியாதை கிடைக்குமா? அதுவும் கிடையாது. நம்மை ஒரு கொலைகாரனைப்போல் காவல் நிலையத்தின் ஒரு மூலையில் முடக்கிவிடுவார்கள். ஆனால், 17 வயது இளைஞன்… மன்னிக்க, சட்டத்தின்படி ‘சிறுவன்’ என்று குறிப்பிடப்படும் அந்த இளைஞன் நிகழ்த்தியது ஒரு கொலை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then