நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
– குறள் 28
ஒப்பாரி அரசியல் மூலம் நிறுவப்படும் `தலித் வரலாறு’ என்ற கோணத்தில் சமீப காலமாக யோசனை சென்றுகொண்டிருக்கிறது.
வேஷ பிராமணர்களால் இந்திரன் என்ற புத்தரது பெயர் ஒன்று ஸ்திரீலோலனாக, கொல்லப்படுபவனாகக் கதைகளில் புனையப்பட்ட விசயத்தைப் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் சொன்னபோது ஒரு வாசகம், வார்த்தை, சம்பவம் தொடர்ச்சியாக வெவ்வேறு புனைகதைகளுடன் செருகப்பட்டு வருவதன் உள்ளரசியல் பற்றிய யோசனை எனக்குள் முளைத்தது. இன்றைய நிலைத்தன்மைகளைக் கலைத்துப்போட்டு ஆராய்ந்து பார்க்கும் ஆவல் தொற்றிக்கொண்டுள்ளது.
முதலில் நாம் நம் சமூகத்தின் இன்றைய நிலை என்பது கடந்த நூறு – இருநூறு வருடங்களால் கட்டமைக்கப்பட்டதுதான் என்ற புரிதலுக்கு வரலாற்றறிவோடு வந்தாக வேண்டியிருக்கிறது. பௌத்தம் அழிந்துவிட்டது அழித்துவிட்டனர் என்பதை மறுத்து இதோ இன்னும் வாழ்கிறது பௌத்தம் என்று நிறுவிய பண்டிதர் அயோத்திதாசரின் பார்வை நமக்குத் தேவை. ஆக, இன்றைய அரசியல் தேவையும் போதாமையும் கடந்த இருநூறு ஆண்டுகளில் திரிபுவாதங்களால் நடந்த குளறுபடிகளாலேயே என்பதை நான் நம்புகிறேன்.
சமீபத்திய ஒரு சம்பவம், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் `தமிழ் மரபு-தாய்மதம்-சைவம்’. இந்தக் கருத்து சனாதனக் கருத்து என்று விமர்சித்த பலரும் போகிறப்போக்கில் ஒரு பொய்யை உண்மையென ஏற்க வைத்திருக்கிறார் என்பதைக் கண்டுகொள்ளவில்லை. மறுத்துப் பேசியவர்களும் நாட்டார் தெய்வ வழிபாடு, மறைந்த ஆய்வாளர் தொ.பரமசிவன் மேற்கோள்களென மதம் என்ற அமைப்பைத் தட்டிக்கழித்துப் பேசுவதோடு நிறுத்திக்கொண்டனர். தமிழ் மரபுப்படி தாய்மதம் சைவம்தானா என்றால் இல்லவே இல்லை என்கின்றன நம் தமிழ் இலக்கிய வரலாற்றின் வழியே பௌத்தமும் சமணமும்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then