“வரலாறு, தரவுகள் சார்ந்தது மட்டுமல்ல. தரவுகளை எவ்வாறு பொருள் கொள்கிறோம் என்பதையும் சார்ந்ததுதான்.”
– ஸ்டாலின் ராஜாங்கம்
சமூகத்தின் பெறுமதியாக விளங்கும் வரலாற்றுத் தரவை யாருக்கு இசைவாக விளக்குகிறோம் என்பதிலிருந்து அதன் உள்மெய்யான பொருளை விளங்கிக்கொள்ள முடியும். ஒரு தரவு சமூகத்தின் அசைவியக்கத்திற்கேற்ப காலந்தோறும் வெவ்வேறு பொருளைத் தன்னுள் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, ‘பீமா கோரேகான்’ என்பது ஆதிக்க பேஷ்வா படையினருக்கும் ஒடுக்கப்பட்ட மகர் படையினருக்கும் இடையேயான சமர். பேஷ்வாக்களின் அதிகாரத்தைப் பிரிட்டிஷாருக்குக் கைமாற்றுவதற்காக நடைபெற்ற ஒன்று. பின்னாளில் சாதி எதிர்ப்பின் குறியீடாகப் பொருள்கொள்ளப்பட்டு, ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியல் களத்தில் நிலைபெறுகிறது. இது வலிந்து செய்யப்பட்டதன்று. அப்படி வாசிப்பதற்கான எல்லைகளை அது கொண்டிருக்கிறது. இவ்வாறு வரலாற்றின் எல்லாத் தரவுகளையும் மாற்றிப் பொருள் கொள்ள முடியுமா என்றால், நிச்சயம் முடியும். இதுவே இதனுள் இருக்கும் நல்வினையும் தீவினையுமாகும். பிரதியை, வரலாற்றுக் கதையாடலை இடையீடு செய்து விளக்கமளிக்கும்போது அதுவரை சமூகம் நம்பிவந்த மதிப்பீடுகள் எல்லாம் காலாவதியாகின்றன. தரவுகள் என்பவை நேரடியாகக் காணக்கிடப்பவை மட்டுமல்ல, புறமெய்க்கு எட்டாத உள்மெய்யிலும் அசலானவை கிடைக்கக்கூடும். “ஆய்வில் தரவுகள் கிடைக்கவில்லை என்பதுகூட ஒரு தரவுதான்” என்கிறார் டி.தருமராஜ். இளையராஜா என்பவர் திரை இசையமைப்பாளர், ஓர் ஆன்மீகவாதி என்கிற அளவில் அல்லாமல் அவரை எவ்வாறு பொருள் கொள்வது. தன் இசையின் வழியாக இச்சமூகத்திற்கு அவர் கடத்தியது என்ன? நம் காலத்தின் வரலாறாக நீண்டு கிடக்கும் அவரை ஒருவரலாற்றுத் தரவாகக் கொண்டு விளக்கமளிக்க முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





