1
“ஏய் கிட்டிய ஒட்டி நிக்கிறவய்ங்கலாம் தள்ளிக்கப்பா. அடுத்து பெற வாடிக்குள்ள நிக்கிறது கள்ளம்பட்டி மருது மாடு. பேரு கொம்பன். எப்புடிப் பாத்தாலும் மாடு பன்னெண்டு புடி இருக்கும்யா. அழகான தொங்கு நாடி. போனத் திருப்பவிட இந்தத் திருப்பு மாடு ராங்கா தெரியுது. கொம்பன்னு பேருக்கு ஏத்தாப்புல நல்ல விரி கொம்பு மாடுப்பா. அது நிக்கிற தோரணையும், பாக்குற தினுசையும் பாக்கும்போதே பத்துப் பேத்தையாவுது பாடையில ஏத்தும் போலருக்குயா. 108 ஆம்புலன்ஸுல போக விரும்புறவன் மட்டும் மாட்ட ஒட்டு. மத்த ஆளு ஒதிங்கிக்க” என்று ஒலிப்பெருக்கியில் அறிவிப்பாளர் சொல்லும்போது பார்வையாளர்கள் கூட்டத்திலிருந்து விசில் சத்தமும் கரவோசையும் கிளம்பின. “அந்த அம்மா பேரு என்னப்பா பாண்டியம்மாவா? வீரத் தமிழச்சி பாண்டியம்மா, மூக்கணாங்கவுத்த உருவி விடுத்தா. தெம்பு இருக்கவன் மாட்டக் கட்டுயா. மத்தவன் ஒதுங்கிக்க. லாதியா குத்துப்பட்டுச் சாவாத” என்று அறிவிப்பாளர் சொன்னதும் பாண்டியம்மாவிற்கு உச்சி குளுந்துவிட்டது. கிட்டியை ஒட்டிக் கட்டியிருந்த தடுப்புச் சாரத்தில் புடிகாரர்களில் பலர் உயிருக்குப் பயந்து ஏறி நின்றுகொண்டனர். ஆனாலும் சிலர் மட்டும் கொம்பனைக் கட்டியே தீர வேண்டுமென்று கிட்டியை ஒட்டி நின்றுகொண்டிருந்தார்கள்.
மருது குலசாமியை வேண்டிக்கொண்டு கொம்பனின் திமிலிலும் பட்டையிலும் மஞ்சளையும் வண்ண வண்ண ஜிகினாவையும் கொட்டிவிட்டான். கிட்டியிலிருந்து தாவி வெளியே ஓடிவந்த கொம்பனைச் சில புடிகாரர்கள் கட்டத் தாவினர். ஆனால், கொம்பன் வெறி பிடித்ததுபோல அவர்களை உலுப்பிக் கீழே தள்ளியது. “மாடு வளத்தா இப்புடி வளக்கணும்யா. இல்லாட்டி ரெண்டு கறவய வளத்திட்டுப் போயிறணுமுயா. அங்க பாருயா ஆட்டத்த. ஆகா! ஆகா! ஆகா! எப்புடித் தூக்கித் தூக்கி வீசுது பாருயா.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then